சிறிய பியூச்சர் போன்களுக்கான இயங்கு தளத்தினை உருவாக்கும் கைஓஎஸ் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 22 மில்லியன் டாலரினை முதலீடு செய்துள்ளது. கைஓஎஸ் நிறுவனம் தான் ஜியோ பியூச்சர் போன்களுக்கு இயங்குதளம் அளித்த நிறுவனம் ஆகும்.

கூகுள் நிறுவனம் கைஓஎஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ததினை அடுத்து பியூச்சர் போன்களின் இயங்குதளங்களிலும் கூகுள் செயலிகளான தேடல், மேப், யூடியூப் போன்றவற்றை அறிமுகம் செய்ய உள்ளன.
கைஓஎஸ் மற்றும் ஜியோ போன்
கைஓஎஸ் லினக்ஸ் அடிப்படையிலான மொபைல் போன் இயங்குதளங்களைப் பியூசர் போன்களுக்காக வழங்கி வருகிறது. இந்த இயங்குதளத்தினை ஜியோ போன் பயன்படுத்தியதை அடுத்துப் பிரபலமானது. 1500 ரூபாய் ஜியோ பியூச்சர்போனில் 4ஜி இணையதளச் சேவை கிடைத்தாலும் பெஸ்புக், வாட்ஸ்ஆப், கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட குறைந்த அளவிலான செயலிகள் மட்டுமே இயங்குகின்றது.
கைஓஎஸ்
கூகுள் நிறுவனத்தின் முதலீடு மூலம் இணையதளத்தினை இன்னும் அணுக முடியாத பல இடங்களில் சென்று கைஓஎஸ் சென்று அடைய உதவும் என்று கைஓஎஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான செபாஸ்டின் தெரிவித்துள்ளார்.
கூகுள்
கைஓஎஸ் நிறுவனத்தில் செய்துள்ள முதலீட்டினால் 2000 ரூபாய்க்குள் விற்கப்பட்டு வரும் மொபைல் போன்களிலும் கூகுள் செயலிகள் மற்றும் சேவைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. குகுள் நிறுவனம் ஆண்டிராய்டு கோ இயங்குதளம் மூலம் அடுத்தக் கட்டத்தினை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த இயங்கு தளம் ஆனது குறைந்த விலை உடைய ஸ்மார்ட்போன்க்ளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.
ஜியோ
ஜியோ பியூச்சர் போன் ஆனது சர்வதேச அளவில் அதிகம் விற்பனை செய்யப்படும் போனாக உள்ளது. இந்தியாவில் மீண்டும் ஜியோ மூலம் பியூச்சர் போன் 4ஜி சேவை உடன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications