ஐஆர்சிடிசி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட 7 அம்சங்கள்

டிஜிட்டல் இந்தியா எண்ணற்ற மாற்றங்களை கண்டு வருகின்றது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு சேவைகள் இணையத்தின் வழியே கிடைக்கின்றது. எனினும் சில வளைத்தளங்கள் பயனாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும், சேவைகளை எளிதாக்கவும், அரசாங்கங்களின் பல்வேறு இணையத்தளங்கள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்திய ரயில்வேயின், இந்திய இரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா நிறுவனமானது தனது மேம்படுத்தப்பட்ட இணையத்தளத்தை கடந்த மே மாதத்தின் இறுதியில் அறிமுகப்படுத்தியது.

எனினும் இந்த இணையத்தளமானது ஒரு பீட்டா வளைத்தளமாகவே வெளியிடப்பட்டது. இந்த வளைத்தளத்தை பயன்படுத்திய பயனாளர்களின் நேர்மறையான பின்னூட்டங்களுக்கு பிறகு, ஜூன் மாதத்தின் நடுப்பகுதியில், முழுமையான இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய வளைத்தளத்தில் பயனாளர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனமானது, பல்வேறு புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. அதைப்பற்றிய விபரங்களை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

1. உள்ளே நுழையாமல் பயணச் சீட்டின்  தற்போதைய நிலையை சோதிக்கும் வசதி

1. உள்ளே நுழையாமல் பயணச் சீட்டின் தற்போதைய நிலையை சோதிக்கும் வசதி

நாம் ஒரு பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்போ அல்லது விடுமுறை நாட்களில் திடீரென்று ஒரு பயணத்தை மேற்கொள்ள விரும்பினால், குறிப்பிட்ட ரயிலில் பயணச் சீட்டு காலியாக இருக்கின்றதா என்பதை சரி பார்க்க வேண்டும். உங்களுக்கான கணக்கு விபரங்கள் உங்களிடம் இல்லையெனில், பழைய இணையத்தளத்தில் பயணச் சீட்டின் தற்போதைய நிலையை பார்க்க இயலாது. எனினும் இப்பொழுது உள்ள தளத்தில் உங்களுடைய கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையாமல், தற்போதைய பயணச் சீட்டின் நிலவரத்தை உங்களால் பார்க்க இயலும். அதன் பின்னர் உங்களுக்கு பயணச் சீட்டு தேவையெனில், உங்களுடைய கடவுச் சொல்லைப் பயன்படுத்தி, உள்சென்ற பின்னரே உங்களால் பயணச் சீட்டை பெற இயலும்.

2. பரிவர்த்தனை வரலாற்றை காணும் வசதி

2. பரிவர்த்தனை வரலாற்றை காணும் வசதி

புதிய இணையதளத்தில் உங்களுடைய கணக்குக்கான 'என்னுடைய பரிவர்த்தனைகள்' என்கிற டேப் உள்ளது. அதனுள் சென்று நீங்கள் உங்களுடைய பழைய பரிவர்த்தனைகளைக் காணலாம். அந்த பரிவர்த்தனைகளில் உங்களுடைய முன்பதிவு தேதி மற்றும் பயண நேரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னெவெனில், உங்களுடைய பயணத்திற்குப் பின்னர் நீங்கள் ஒரு வேளை உங்களுடைய பயணச் சீட்டை தவறவிட்டால், உங்களால் உங்களுடைய விடுமுறை பயண சலுகைகளுக்காக விண்ணப்பிக்க இயலாது. எனவே நீங்கள் ஏற்கனவே பயணம் செய்த பயணச் சீட்டுகளைப் பெற இந்த இணையத்தளத்தில் உங்களுடைய கணக்கிற்கு உள்ளே 'நிறைவு செய்த பயணம்' என்கிற டேப்பை உபயோகிக்கவும்.

3. விகல்ப் வசதி

3. விகல்ப் வசதி

பழைய வலைத்தளத்தில் விகல்ப் வசதி இருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்தி ஒரு காத்திருப்பு பயணச்சீட்டை பெற்ற ஒரு பயனாளர் அதிகபட்சமாக 7 மாற்று ரயில்களில் ஒரு வேளை இடம் இருந்தால், உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டைப் பெற இயலும். எனினும் புதிய இணையதளமானது ஒரு பயனர் பதிவு செய்த வரலாற்றில் இருந்து விகல்ப் விருப்பத்தை தேர்வு செய்யலாம். அதோடு உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டினுடைய போர்டிங் இடத்தை மாற்றலாம்.

4. டிக்கெட் உறுதிப்படுத்தல் கணிப்பு வசதி

4. டிக்கெட் உறுதிப்படுத்தல் கணிப்பு வசதி

புதிய ஐஆர்சிடிசிசி இணையதளம் ஒரு பயனாளர் தனக்கு உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டு கிடைக்குமா எனபதை அனுமானிக்க அனுமதிக்கின்றது. ஒரு வேளை பயனாளர்களுக்கு காத்திருப்போர் பட்டியல் அல்லது ஆர்.ஏ.சி டிக்கெட் மட்டுமே தற்போது கிடைக்கின்றது எனில், அவர்கள் இந்த இணையத் தளத்தைப் பயன்படுத்தி தனக்கு உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டு கிடைக்குமா என்பதை அனுமானிக்க இயலும். இந்த தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள படிமுறை கடந்த இரண்டு ஆண்டு வரலாற்றை ஆய்வு செய்து, பயணச் சீட்டின் நிலையை அனுமானிக்கின்றது. இதைப் பயன்படுத்தி ஒரு பயனாளர், மாற்று ரயிலை அல்லது விகல்ப் திட்டத்தை தேர்வு செய்யலாம்.

5. பிரிவுகளுக்கான வடிகட்டி வசதி

5. பிரிவுகளுக்கான வடிகட்டி வசதி

இந்த இணையத்தளத்தில் பயனாளர்கள் இலக்கு வாரியாக, ரயில் வாரியாக, கோட்டா வாரியாக, அல்லது நேரத்தைப் பொறுத்து ரயில்களைத் தேடும் வசதி உள்ளது. எனவே உங்களுடைய பயணத்திட்டத்தை மிக எளிதாக வகுக்கலாம். அதோடு கூடுதலாக, ரயில் எண், ரயில் பெயர், வருகை நேரம், புறப்படும் நேரம், ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தூரம் ஆகிய அனைத்தும் ஒரே ஒரு திரையில் கிடைக்கின்றன.

6. எழுத்துரு அளவை மாற்றும் வசதி

6. எழுத்துரு அளவை மாற்றும் வசதி

இந்த இணையதளத்தில் காட்டப்படும் எழுத்துருவின் அளவை மாற்றும் வசதி உள்ளது. இது கண் பார்வை பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

7. இசைவான மாற்றம்

7. இசைவான மாற்றம்

புதிய மேம்படுத்தப்பட்ட வசதி உங்கள் மொபைல் ஃபோன், டேப்லெட், மடிக்கணினி மற்றும் டெஸ்க்டாப்பிற்கு இடையில் எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி மாற்றும் வசதியை அளிக்கின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+