என்னதான் இந்தியாவிலேயே அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் முதலிடத்தில் இருந்தாலும் அதன் தலைவர் கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து ஆண்டுக்கு ரூ15 கோடி தான் சம்பளமாக பெற்றுவருகிறார்.இவர் ஒரு நிமிடத்திற்கு ரூ288ம், ஒரு மணிநேரத்திற்கு ரூ17,333ம், ஒரு நாளுக்கு ரூ4.16லட்சமும், ஒரு மாதத்திற்கு சுமார் ரூ 1.25கோடியும்,ஒரு ஆண்டிற்கு என எடுத்துக்கொண்டால் ரூ15 கோடியும் சம்பளமாக பெற்றுவருகிறார்.
குறிப்பாக இவரின் சம்பளம் அவ்வளவு சிறப்பானதாக இல்லாவிட்டாலும், இவர் தான் இப்போதும் இந்தியாவின் பணக்கார மனிதராக உள்ளார்.
எனவே ரிலையன்ஸ் நிறுவன தலைவரின் சம்பளம் நிலையாக இருக்கும் நிலையில், வேறு சில அனுபவமிக்கவர்கள் இவரை விட அதிக சம்பளம் பெறுகின்றனர். அந்த நிர்வாக இயக்குநர்களின் பட்டியலை இங்கு காணலாம்.
1) ஏ.எம் நாயக்
எல்&டி நிறுவனத்தின் குழு செயல் தலைவரான இவர், 2017ம் நிதியாண்டில் ரூ40.87 கோடியை சம்பளமாக பெற்றார்.
2) ஒய்.சி தேவேசவர்
சந்தை மூலதனத்தில் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய ஐடிசி நிறுவனத்தின் தலைவரான இவர், 2017ம் நிதியாண்டில் ரூ 21.17 கோடி வருவாய் பெற்றார்.
3) குவன்டர் பட்சீக்
முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சி.ஈ.ஓவான இவர், முகேஷ் அம்பானியை விட அதிகமாக ரூ22.55 கோடியை 2017ம் நிதியாண்டில் சம்பளமாக பெற்றார்.
4) நிகில் மேஸ்வானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பு வகிப்பவரும், அதன் செயல் இயக்குனருமான நிகில், 2018ம் நிதியாண்டில் ரூ19.99 கோடியை ஊதியமாக பெற்றார்.
5) ஹிடல் மேஸ்வானி
ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் மற்றும் சுத்திகரித்தல் பிரிவின் செயல் இயக்குனரான ஹிடல், ரூ19.99 கோடியை ஊதியமாக பெற்றார்.
6) சுனில் மிட்டல்
2017ம் நிதியாண்டில், பார்தி ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் தனது ஆண்டு சம்பளமாக ரூ30.10 கோடியை பெற்றார்.


Click it and Unblock the Notifications