நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி ஜூன் மாதத்தில் அதிகளவிலான விற்பனையைச் செய்து அசத்தியுள்ளது. கடந்த நிதியாண்டின் ஜூன் மாதத்தில் 1,06,394 கார்களை விற்பனை செய்த மாருதி, 2018இல் 1,44,981 கார்களை விற்றுக் கலக்கியுள்ளது. இந்த அளவீடு சுமார் 36.3 சதவீதம் அதிகமாகும்.
ஜூன் மாதத்தில் இந்தியாவில் சுமார் 1,35,662 கார்களை விற்பனை செய்துள்ளது, மீதமுள்ளவை வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

இந்நிறுவனத்தின் முக்கியக் கார் தயாரிப்பான ஆல்டோ, வேகன்ஆர் ஆகியவற்றின் விற்பனை 15.1 சதவீதம் அதிகரித்துள்ளது அதேபோல் ஷிப்ட், எஸ்டிலோ, டிசையர், பலெனோ ஆகியவற்றின் விற்பனை 76.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் சியாஸ் காரின் விற்பனை 60 சதவீதம் சரிந்துள்ளது, மேலு் எர்டிகா, ஸ்கிராஸ், ப்ரீசா ஆகியவற்றின் விற்பனை 39.2 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications