நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இதனால் பிஎன்பி வங்கியின் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் என அனைத்து வகையான கடனுக்காக ஈஎம்ஐயும் அதிகரிக்கும் நிலை உருவாகியது.
ரிசர்வ் வங்கி
சமீபத்தில் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை மறுசீரமைரப்பு செய்தது, இதன் வாயிலாகத் தற்போது வணிக வங்கிகளும் வட்டி விகித்தை உயர்த்தி வருகிறது.
இதன் வரிசையில் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 0.05 முதல் 0.10 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
இந்நிலையில் 6 மாத கடனுக்குத் தற்போது 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 1,2,3 வருடக் கடன்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.45, 8.60, 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அலகாபாத் வங்கி
பிஎன்பி வங்கியைப் போல் அலகாபாத் வங்கியும் தனது கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் வரையில் உயர்த்தி அறிவித்துள்ளது. 1,2,3 வருட கடன்களுக்கு 10 அடிப்படை புள்ளிகள் உயர்த்தி 8.45, 8.60, 8.20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நீரவ் மோடி
பஞ்சாப் நேஷனல் வங்கி ஏற்கனவே அதிகளவிலான வராக்கடன் பிரச்சனை மற்றும் வருவாய் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த வட்டி விகித உயர்வின் மூலம் கூடுதல் வருவாய் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு இவ்வங்கியில் நீரவ் மோடி செய்த 12,000 கோடி மோசடி வழக்குகள் பெரிதாக வெடித்துள்ள நிலையில் வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications