கிட்டத்தட்ட 10 லட்சம் வணிகர்கள் இணைந்து இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் மற்றும் அமெரிக்க வால்மார்ட் எதிராக நாடு தழுவிய போராட்டத்தினைச் நடத்தி வருகின்றனர்.
பிளிப்கார்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் இணைந்து செயல்படும் போது சந்தையினைப் பிடிக்க மிகக் குறைவான விலை, மிக அதிக டிஸ்கன்வுட் மற்றும் முதலீடுகள் நட்டம் போன்றவை அடைய வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை 16 பில்லியன் டாலர் மதிப்பில் வால்மார்ட் வாங்கியுள்ளது.
சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு
பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையில் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தினை எதிர்த்து அனைத்து இந்திய வணிகர்கள் சங்கம் போராடி வருகிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் மூலம் கால் அடி எடுத்து வைக்கும் வால்மார்ட் மூலம் சிறு வணிகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகின்றனர்.
இ-காமர்ஸ்
இ-காமர்ஸ் வணிகத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான எந்த ஒரு சட்டமும் இந்தியாவில் இல்லை என்பதால் வெளிநாட்டு நேரடி முதலீடு மூலம் எளிதாக வால்மார்ட்டுக்கு இந்திய சந்தையில் காலூன்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடிதம்
போட்டி
சர்வதேச அளவில் விலை குறைவாக விற்று வால்மார்ட்டுக்கு போட்டி யாரும் இல்லை என்ற நிலைக்கு இந்த இணைவு கொண்டு செல்லும். இ-காமர்ஸ் வணிகங்களுக்கு என இது வரை எந்தச் சட்டத்தினை இந்திய அரசு வகுக்கவில்லை. இது குறித்துக் கடிதத்தினையும் வணிகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவிடம் அனைத்து இந்திய வணிகர் சங்கங்கள் அளித்துள்ளன.
நீதிமன்றம் செல்ல தயார்
வணிகர் சங்கங்கள் பிளிப்கார்ட் - வால்மார்ட் ஒப்பந்தத்திற்கு இன்னும் இந்தியா காம்பெட்டிஷன் ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த அனுமதியை வழங்க கூடாது என்றும் இரண்டு நிறுவனங்களும் இணைவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவும் வணிகர் சங்கங்கள் தயாராக உள்ளன.
இ-காமர்ஸ் கொள்கை
அனைத்து இந்திய வணிகர் சங்கமானது இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், அனைத்து இ-காமர்ஸ் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. மேலும் இதற்கான கொள்கைகளை இருவாக்கும் வரை இரண்டு நிறுவனங்களும் இணைய ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இணைவு எப்போது நடக்கும்?
பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் முழுமையாக இணைய 2019 ஜூன் 7 வரை கால அவகாசம் உள்ள நிலையில் வால்மார்ட் அதனை 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் செய்ய வேண்டும் இருக்கின்றது.
கிழக்கு இந்திய கம்பெனி
சுதந்திரப் போராட்டங்களின் போது இந்தியா எப்படிக் கிழக்கு இந்திய கம்பெனிக்கு எதிராகப் போராடியதோ அதே போன்ற ஒரு நிறுவனம் தான் அமெரிக்காவின் வால்மார்ட் என்றும் அனைத்து இந்திய வணிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications