2017-2018 நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் கடந்த 5 வருடம் இல்லாத அளவிற்குச் சரிந்து 3 சதவீதம் என 44.85 பில்லியன் டாலர் மட்டுமே பெற்றுள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 8.67 சதவீதம் வந்துள்ளது. இதுவே 2015-2016 நிதி ஆண்டில் 29 சதவீதமும், 2014-2015 நிதி ஆண்டில் 27 சதவீதமும், 2013-2014 நிதி ஆண்டில் 8 சதவீதமும் இந்தியாவிற்குக் கிடைத்துள்ளது. அதிலும் 2012-2013 நிதி ஆண்டில் 38 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டினை இந்தியா பெற்றுள்ளது.
எப்படி அதிக வெளிநாட்டு முதலீடுகள் பெறுவது?
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க உள்நாட்டு முதலீடுகள் விதிகளைப் புதுப்பிக்க வேண்டும் மற்றும் இந்தியாவில் வணிகம் துவங்குவதற்கான விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள்
இந்தியா வெளிநாட்டு முதலீடுகளைக் கவருவதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது, அதுவே உள்நாட்டு முதலீடுகள் சரிந்து காணப்படுவதற்கான காரணம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் பிஸ்வாஜித் தார் கூறுகிறார்.
வெளியேற்றம் அதிகம்
இந்தியாவிற்கு வருகின்ற முதலீடுகள் குறைந்த வரும் அதே நேரம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் செய்யப்பட்டு வரும் முதலீடுகள் இரட்டிப்பாகி 11 பில்லியன் டாலர்களாக உள்ளது என்றும் தரவுகள் கூறுகின்றன.
இந்தியா
வெளிநாட்டு முதலீடுகள் சரிந்து வருவது என்பது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகப் பெரிய பின்னடைவை அளிக்கும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
துறை வாரியான அறிக்கை
கடந்த நிதி ஆண்டில் அதிகளவில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்த்த துறைகள் விவரங்களை இங்குப் பார்க்கலாம்.
சேவை துறை : 6.7 பில்லியன் டாலர்
கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை : 6.15 பில்லியன் டாலர்
தொலைத்தொடர்பு தூறை : 6.21 பில்லியன் டாலர்
டிரேடிங் : 4.34 பில்லியன் டாலர்
கட்டுமானம் : 2.73 பில்லியன் டாலர்
ஆட்டோமொபைல்: 2 பில்லியன் டாலர்
மின்சாரம் : 1.62 பில்லியன் டாலர்
இந்தியாவில் அதிகம் முதலீடு செய்த நாடுகள்
இந்தியாவில் மொரீஷியஸில் இருந்து அதிகபட்சமாக 15.94 பில்லியன் டாலரும், சிங்கப்பூரில் இருந்து 12.18 பில்லியன் டாலரும், நெதர்லாந்தில் இருந்து 2.8 பில்லியன் டாலரும், அமெரிக்காவில் இருந்து 2.1 பில்லியன் டாலரும், ஜப்பானில் இருந்து 1.61 பில்லியன் டாலரும் வெளிநாட்டு முதலீடுகளைச் செய்துள்ளனர்.
இந்திய வரலாற்றிலேயே 2017-2018 நிதி ஆண்டில் பெற்றது தான் மிகக் குறைந்த வெளிநாட்டு நேரடி முதலீடு என்றும் கூறப்படுகிறது.
ரூபாய் மதிப்பு
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் இருந்து வந்த நிலையில் இந்தச் சரிவானது மிகப் பெரிய பொருளாதாரத் தக்கத்தினை ஏற்படுத்தும் மற்றும் ரூபாய் மதிப்பு மேலும் சரியவும் வாய்ப்புகள் உள்ளது.
எதிர்க்கட்சிகள்
பாஜக ஆதரவாளர்கள் மோடியின் வெளிநாடு பயணங்களால் அதிக வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்து வருவதாகக் கூறி வரும் நிலையில் தற்போதைய சரிவினை மிகப் பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
More From GoodReturns

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications