சிறு சேமிப்பு திட்டங்களான பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, கிசாவ் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு பத்திய, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்றவற்றின் ஜூலை-செப்டம்பர் காலாண்டின் வாட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை.
அரசு 10 ஆண்டுப் பத்திர திட்டங்கள் மீதான வருவாய் உயர்வு, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை 6.25% ஆக உயர்த்தி இருப்பது, வங்கிகள் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது போன்ற காரணங்களால் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாற்றம் ஏதும் இல்லை என்பது ஏமாற்றத்தினை அளித்துள்ளது.
எனவே 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பிபிஎப் மற்றும் என்எஸ்சி
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் ஆகிய திட்டங்களில் 2018 ஏப்ரல் முதல் 2018 செப்டம்பர் வரை 7.6 சதவீதமாக வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
கிசான் விகாஸ் பத்திரா
கிசான் விகாஸ் பத்திரா திட்டம் கீழ் முதலீடு செய்தவர்களுக்கு 7.3 சதவீதமாக வரும் காலாண்டில் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.3 சதவீதமாக அளிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் மூத்த குடிமக்களுக்கு 8.3 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு
தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதமும் 4 சதவீதமாகத் தொடருகிறது.
வட்டி விகிதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. அரசு பத்திரங்கள் கீழ் கிடைக்கும் லாபத்தினை வைத்துச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications