யூடியூப் நிறுவனம் கிரியேட்டர்களுக்கு அதிக வருவாயினை அளிப்பதில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அதனைத் தவிர்க்கும் படி சன் நெக்ஸ்ட், ஹாட்ஸ்டார் போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக யூடியூப் உறுப்பினர்கள் சேவை மூலம் பார்வையாளர்களிடம் இருந்து பணம் வசூலித்து வீடியோ கிரியேட்டர்களுக்கு அதிக வருவாயினை அளிக்க முடிவு செய்துள்ளது.
தற்போது கூகுள் நிறுவனத்திற்கு அதிக வருவாய் ஆனது விளம்பரம் மூலம் தான் கிடைத்து வருகிறது, அதனை யூடியூப் மூலமாகவும் அதிகரிக்க இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
விளம்பரம் இல்லாமல் பிற வழிகளிலும் சம்பாதிக்கலாம்
யூடியூப் கிரியேட்டர்கள் விளம்பரம் இல்லாமல் பிற வழிகளிலும் சம்பாதிக்கலாம் என்றும் அதற்குப் பல வழிகளை யூடியூப் வழங்கி வருகிறது என்றும் யூடியூப்பின் மூத்த அதிகாரியான நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் கட்டணம்
ஒரு லட்சம் உறுப்பினர்களுக்கும் அதிகமாக உள்ள ஒரு யூடியூப் சேனலுக்கு மாதம் 4.99 டாலர் பணத்தினைச் செலுத்தும் போது விடியோ கிரியேட்டர்கள் அவர்களுக்கான லைவ் வீடியோ, கூடுதல் வீடியோ அல்லது ஷவுட் அவுட் சேவைகள் வழங்குவதன் மூலம் அதிக வருவாயினை ஈட்ட முடியும்.
விற்பனை
வீடியோ கிரியேட்டர்களால் ஷர்ட், போன் கேஸ் போன்றவற்றையும் அவர்களது சேனல்கள் மூலம் விற்கலாம் என்றும் யூடியூப் தெரிவித்துள்ளது.
போட்டி
யூடியூப் நிறுவனமானது சிறிய அளவிலான விளம்பர வருவாயினை வீடியோ கிரியேட்டர்களுக்கு அளிக்கிறது. யூடியூப் தளத்திற்குப் பிற தளங்களில் இருந்து அதிக வீடியோக்கள் உடன் மிகப் பெரிய போட்டி உருவாகி வருகிறது.
யூடியூப்
யூடியூப் தளத்தில் 1.9 பில்லியன் பயனர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது யாரெல்லாம் பயனர் ஐடி மூலம் லாக்-இன் செய்த பிறகு வீடியோ பார்க்கிறார்களோ அவர்களை மட்டும் தான் கணக்கில் எடுத்துக்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications