ஏர் ஏசியா இந்தியா விமான நிறுவனமானது பருவ காலச் சலுகையாக உள்நாட்டு விமானப் பயண டிக்கெட்களை 1,299 ரூபாய் முதல் என அறிவித்துள்ளது. அதுவும் இந்தச் சலுகையானது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் பிற வழித்தடங்களில் இந்தச் சலுகைகளைப் பெறலாம் என்று ஏர் ஏசியா இந்தியா தெரிவித்துள்ளது.
சலுகை காலம்
2019 ஜனவரி 31-ம் தேதி வரையிலான விமானப் பயண டிக்கெட்களை 2018 ஜூலை 8-ம் தேதி வரை முன்பதிவு செய்து சலுகை விலையில் பெறலாம் என்று ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
சலுகை விலை டிக்கெட்கள் எங்குக் கிடைக்கும்
ஏர் ஏசியா இந்தியாவின் சலுகை விலை டிக்கெட்களானது airasia.com இணையதளம் மூலம் புக் செய்யும் போது கிடைக்கும். வார விடுமுறை நாட்களில் இந்தச் சலுகையில் டிக்கெட்கள் கிடைக்காது.
ரூ.1,299 சலுகை உள்ள வழித்தடங்கள்
பெங்களூரு - ஹைதராபாத், பெங்களூரு - கொச்சி வழித்தடங்களில் பயணம் செய்ய 1,299 ரூபாய் விமான டிக்கெட் என அறிவித்துள்ளனர்.
பிற வழித்தடங்கள்
ராஞ்சி - கொல்கத்தா செல்ல 1,599 ரூபாய் என்றும், புவனேஷ்வர் - கொல்கத்தா செல்ல 1,499 ரூபாய் என்றும் கோவா- ஹைதராபாத் செல்ல 1,999 ரூபாய் என்றும், கவுகாத்தி-இம்பால் செய்ய 1,399 ரூபாய் எனவும், புனே - பெங்களுரு செல்ல 2,099 ரூபாய் எனவும், ஸ்ரீநகர் - டெல்லி செல்ல 2,899 ரூபாய் என்றும், ஜெய்ப்பூர் - ஹைதராபாத் செல்ல 2,599 ரூபாய் என்றும், டெல்லி - பக்கோத்ரா செல்ல 3,299 ரூபாய் என்றும் விமான டிக்கெட்களை ஏர் ஏசியா இந்தியா அறிவித்துள்ளது.
மலேஷியா
ஏர் ஏசியா நிறுவனமானது மலேஷியா செல்லும் விமான டிக்கெட்களை 62 டாலருக்குப் பெறலாம் என்றும், ஞாயிற்றுக்கிழமை வரை சர்வதேச விமானப் பயணங்களுக்கு 20 சதவீத சலுகையினையும் அறிவித்துள்ளது.
போட்டி நிறுவனங்கள்
விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனமானது 7 நாட்கள் முன்பே புக் செய்யப்படும் எக்கானமி வகுப்பு டிக்கெட்களுக்கு 50 சதவீத சலுகையினை அளித்து வருகிறது. இண்டிகோ நிறுவனம் விமான டிக்கெட்களை 1,999 ரூபாய் எனும் விலையில் விற்கிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது உள்நாட்டுப் பயணங்களுக்கு 25 சதவீதம் வெளிநாடு பயணங்களுக்கு 30 சதவீதமும் அடிப்படை கட்டணத்தில் சலுகையினை வழங்கி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications