இந்திய கிரிக்கெட் வீரர் ஆன விராத் கோஹ்லி சமீபத்தில் பிட்னஸ் வீடியோ வெளியிட்டு தனது சவலை பிரதமர் மோடிக்கு அளித்தார். இதனை ஏற்ற மோடி ஸ்டெர்லைட் போன்ற பிரச்சனைகள் பற்றி எரிந்து கொண்டு இருக்கும் போது அதற்கான தனது கருத்தினைக் கூடத் தெரிவிக்காமல் அந்தச் சவாலினை ஏற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
பின்னர் அந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் டிரெண்டு ஆனது ஒரு புறம் என்றால் அதனை விட அவரைக் கிண்டலடித்து வெளியான வீடியோக்கள் பல.
ஸ்கூப் இந்தியா
தற்போது இந்த வீடியோவை உருவாக்க எவ்வளவு செலவானது என்று ஸ்கூப் இந்தியா இணையதளமானது ஒரு தகவலினை வெளியிட்டுள்ளது.
மூன்று நாட்கள்
ஸ்கூப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில் பிரதமர் மோடியின் பிடன்ஸ் வீடியோ மூன்று நாட்கள் எடுக்கப்பட்டு, இரண்டு நாட்கள் எடிட் செய்யப்பட்டு, இதற்காகப் பாலிவுட் திரைப்படக் கலைஞர்கள் எல்லாம் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது.
விளக்கம்
மேலும் இந்த வீடியோ எடுக்க 35 லட்சம் ரூபாய் வரை செலவாகி இருக்கும் என்று, ஒரு நாளுக்கு 12 லட்சம் எனச் செலவு செய்து பிட்னஸ் வீடியோ எடுத்துள்ளனர். இது தங்களுக்குக் கிடைத்த தகவலின் படி தோராயமாக ஆகக் கூடிய செலவு மட்டுமே என்றும் ஸ்கூப் இந்தியா தெரிவித்துள்ளது.
சஷி தரூர்
ஸ்கூப் இந்தியா வெளியிட்டுக் கட்டுரையினை டிவிட்டரில் பகிர்ந்துள்ள சஷி தரூர், யோகா தினத்தினை விளம்பரத்திற்காக மட்டும் மத்திய அரசு 20 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பிற பிரபலங்கள்
சஷி தரூர் மட்டும் இல்லாமல் ஸ்கூப் வெளியிட்ட கட்டுரையினை நிகில் வாக்லே, அமித் மிஷ்ரா, ஷாலு, ஏஏப் இன் நியூஸ் உள்ளிட்ட பிற பிரபலங்களும் பகிர்ந்துள்ளனர்.
சந்தேகம்
அனைத்துப் பிரபலங்களும் ஸ்கூப் இந்தியா வெளியிட்ட செய்தியினை மட்டுமே பகிர்ந்துள்ள நிலையில் மேலே கூறிய செலவுகள் எல்லாம் உன்மைதானா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்துப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளித்தால் தான் உன்மை தெரியும்.


Click it and Unblock the Notifications