மும்பை: பாரத ஸ்டேட் வங்கி திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் அர்ஜித் பாசுவை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.
முன்பு எஸ்பிஐ வங்கியின் துணை நிர்வாக இயக்குநராக இருந்த அர்ஜித் பாசுவிற்கு இந்தப் பதவி உயர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படிப்பு
பொருளாதாரப் பிரிவில் பட்டமும், வரலாற்றுப் பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்ற அர்ஜித் பாசு வணிகக் கடன் மற்றும் ஐடி பிரிவுகளைக் கவனித்துக்கொள்வது மட்டும் இல்லாமல் கூடுதலாக நிறுவனத்திற்குத் தலைவலியாக்க உள்ள வரா கடன் போன்றவற்றை மீட்டு எடுப்பது போன்றவற்றைக் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.
முக்கியப் பதவிகள்
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் பிரிவின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக 2014 ஆகஸ்ட் முதல் 2018 வரை அர்ஜித் பாசு பதவி வகித்துள்ளார். 35 வருட அனுபவம் கொண்ட அர்ஜித் பாசு இந்த நிறுவனத்தின் தலைவராக இருக்கும் போது தான் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஓ மூலம் பங்கு சந்தையில் வெளியிடப்பட்டது.
வெளிநாட்டுப் பொறுப்பு
எஸ்பிஐ வங்கியின் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அர்ஜித் பாசு டெல்லி வட்ட முதன்மை பொது மேலாளராகவும், ஜப்பானின் டோக்கியோவில் பிராந்திய தலைமை & தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார்.
அனுபவம்
எஸ்பிஐ வங்கியில் கார்ப்ரேட் வங்கி சேவைகள், வெளிநாட்டு வங்கி சேவைகள், ரீடெயில் பாங்க்கிங் மற்றும் மனித வள அதிகாரி, வணிகச் செயல்முறை மறுசீரமைப்பு போன்ற பல பிரிவுகளில் அனுபவம் உள்ளவராகவும் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications