நீங்கள் பிட்காயின் அல்லது பிற கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து வந்தால் அதற்கான பரிவர்த்தனைகளை ஜூலை 5-ம் தேதிக்குப் பிறகு வங்கி நிறுவனங்கள் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று ஆர்பிஐ கட்டுப்பாடு விதித்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியானது ஏப்ரல் மாதமே வங்கிகள் கிரிப்டோகரன்சி நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் அதற்கு 3 மாதம் வரை கால அவகாசம் அளிப்பதாகவும் கடைசித் தேதி ஜூலை 5 என்றும் தெரிவித்து இருந்தது.
ஆர்பிஐ
ஆர்பிஐ வங்கிகளுக்கு விதித்துள்ள இந்தக் கட்டுப்பாட்டினால் கிரிப்டோகரன்சிகளில் நீங்கள் செய்துள்ள பணத்தினை ரூபாய் மதிப்பில் ஜூலை 5-ம் தேதிக்கு பிறகு திரும்பப் பெற முடியாது.
வழக்கு
ஆனலைன் மூலம் வர்த்தகம் செய்து வரும் நிறுவனங்கள் ஆர்பிஐ-ன் இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் புதன்கிழமை ஆர்பிஐ-க்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள் பாதுகாப்பானது அல்ல என்று பல முறை தெரிவித்து இருந்த போதிலும் அதிக லாபத்திற்காக ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இது போன்ற திட்டங்களில் முதலீடுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
சிக்கல்
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டு வந்த வழக்கானது ஆர்பிஐ-க்குச் சாதமாக வந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி அளித்து இருந்த காலக்கெடுவும் ஜூலை 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே பிட்காயின் போன்ற கிர்ப்டோகரன்சிகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்குச் சிக்கல் எழுந்துள்ளது.
வேறு வழி உள்ளதா?
அதே நேரம் இந்திய ரூபாய் மதிப்பில் தான் இந்தக் கிரிப்டோகரன்சி முதலீடுகளைத் தொடர முடியாது என்றும், கிரிப்டோகரன்சி முதலீடுகளை அனுமதித்துள்ள நாடுகளின் கரன்சிகளின் கீழ் வர்த்தகம் செய்ய முடியும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன.
ரிஸ்க்
இதனைப் பார்க்கும் போது என்ன ஆனாலும் பரவாயில்லை என்று ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் பிற நாட்டு நாணயங்களின் கீழ் முதலீடு செய்ய அதிக வாய்ப்புள்ளது என்பது மட்டும் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications