வளைகுடா நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 50% சரிவு!

2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 7.6 லட்சம் ஆக இருந்த நிலையில் 2017-ம் ஆண்டு 3.7 லட்சம் ஆகச் சரிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தச் சரிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2017-ம் ஆண்சு அதிகளவில் அந்நிய செலாவணியைப் பெற்ற நாடு இந்தியா தான் என்று உலக வங்கி தெரிவித்துள்ள நிலையில் அதில் 56 சதவீதம் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா,குவைத், ஐக்கிய அமீரகம், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமனில் இருந்து பெற்றுள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு சரிந்துள்ளது என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஐக்கிய அமீரகம்

ஐக்கிய அமீரகம்

2015-ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் 2,25,512 இந்தியர்கள் வேலைக்காகச் சென்ற நிலையில், 2016-ம் ஆண்டு 1,63,716 நபர்களாகவும், 2017-ம் ஆண்டு 1,49,962 ஆகவும் எண்ணிக்கை 33 சதவீதம் வரை சரிந்துள்ளது.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

2015-ம் ஆண்டுச் சவுதி அரேபியாவிற்கு 3,06,642 லட்சம் நபர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்காகச் சென்றுள்ள நிலையில் 2016-ம் ஆண்டு 1,65,355 எனவும், 2017-ம் ஆண்டு 78,611 எனவும் எண்ணிக்கையானது 74 சதவீதம் வரை சரிந்துள்ளது.

குவைத்

குவைத்

2015-ம் ஆண்டுக் குவைத்திற்கு 66,543 நபர்கள் இந்தியாவில் இருந்து வேலைக்குச் சென்றுள்ள நிலையில் 2016-ம் ஆண்டு 73,384 நபர்களாக அதிகரித்தது. ஆனால் 2017-ம் ஆண்டு 56,332 நபர்களாக எண்ணிக்கை சரிந்துள்ளது.

ஓமன்

ஓமன்

2015-ம் ஆண்டு ஓமனில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து 85,028 நபர்கள் சென்றுள்ள நிலையில், 2016-ம் ஆண்டு 63,236 நபர்களாகவும், 2017-ம் ஆண்டு 53,332 நபர்கள் எனவும் 37 சதவீதம் அளவில் எண்ணிக்கை சரிந்துள்ளது.

கத்தார்

கத்தார்

இந்தியாவில் இருந்து கத்தாருக்கு 2015-ம் ஆண்டு 59,340 நபர்கள் பணிக்கு சென்ற நிலையில் 2016-ம் ஆண்டு 30,619 நபர்களாகவும், 2017-ம் ஆண்டு 24,759 நபர்கள் என 58 சதவீதம் எண்ணிக்கை சரிந்துள்ளது.

பஹ்ரைன்

பஹ்ரைன்

2015-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பஹ்ரைனிற்கு 15,619 நபர்கள் பணிக்கு சென்ற நிலையில் 2016-ம் ஆண்டு 11,964 நபர்களாகவும், 2017-ம் ஆண்டு 11,516 நபர்கள் ஆகவும் எண்ணிக்கை சரிந்துள்ளது.

மொத்தம்

மொத்தம்

இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு 2015-ம் ஆண்டு 7,58,684 நபர்கள் பணிக்கு சென்றுள்ளதாகவும், அது 2016-ம் ஆண்டு 5,07,274 அக குறைந்தது என்றும் பின்னர் 2017-ம் ஆண்டு 3,74,560 என 50 சதவீதமாகச் சரிந்துள்ளது எனத் தரவுகள் கூறுகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+