இனி இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் தாங்கள் ஆர்டர் செய்யும் உணவுகளை எப்படிச் சமைக்கிறார்கள் என்று லைவ் வீடியோ சேவையினை ஐஆர்சிடிசி அளிக்கத் துவங்கியுள்ளது.
ஐஆர்சிடிசி சமையல் அறைகளில் சமைக்கப்படும் உணவுகள் தரமானதாக இல்லை, சுத்தமாக இல்லை, கழிவறை நீரை பயன்படுத்துகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வருவதால் அதனைக் குறைக்கும் நடவடிக்கையாக இந்த வீடியோ லைவ் சேவையினை அறிமுகம் செய்வதாகச் சென்ற மாதம் பியூஷ் கோயல் அறிவித்து இருந்தார்.

ஐஆர்சிடிசி சமையல் அறை லைவ் காணொளிகளை ஐஆர்சிடிசி இணையதளக் கேலரி பிரிவில் இருந்து பார்க்க முடியும். இதற்காகவே சிறந்த திறன் கொண்ட சிசிடிவி கேமாரக்களை ஐஆர்சிடிசி சமையல் அறைகளில் பொருத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இந்தச் சமையல் அறைகளில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் அதனை வீடியொ மூலம் கண்டறியக்கூடிய செயற்கை நுண்ணறிவு செயலிகளும் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் சமையல் அறைகளில் கரப்பான்பூச்சிகள் மற்று பிற தவறுகள் கண்டறியப்பட்டுச் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications