இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ஓடிஷா மாநிலம் கூகிள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இக்கூட்டணி சுமார் 250 ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தேர்வு செய்து அந்நிறுவனங்களை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டும் வரும் முயற்சியாக இக்கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் ஓடிஷா மாநில அரசு துணையுடன் கூகிள் ஒவ்வொரு மாதமும் 20 நிறுவனங்கள் தேர்வு செய்து அவர்களை வழிநடத்தவும், உதவி செய்யவும் உள்ளது.

இதேபோல் கூகிள் கர்நாடக, கோவா, தெலுங்கானா மாநிலங்களில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு உதவி செய்து புதிய வர்த்தக வாய்ப்பைத் தேடி வருகிறது..
மேலும் ஓடிஷா மாநிலம் இந்தியாவின் தலைசிறந்த ஸ்டார்ட்அப் வர்த்தகத் தளமாக மாறவேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான அடித்தளத்தைக் கூகிள் நிறுவனத்துடன் போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications