நாட்டின் முன்னணி பேமெண்ட் நிறுவனமான பேடிஎம், கடைசி நேரத்தில் ஹோட்டல் கிடைக்காமல் தவிக்கும் மக்களுக்குப் பிரத்தியேகமாக ஹோட்டல் புக்கிங் சேவை அளிக்கும் நைட்ஸ்டே நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
பேடிஎம்
தற்போது இந்தியாவில் ஆன்லைன் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில் பேடிஎம் அதனைக் குறிவைத்து அனைத்து விதமான ஆன்லைன் சேவைகளையும் தன் நிறுவனத்தில் துவங்கி வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.
இதனால் இந்நிறுவனத்தில் தற்போது பல தரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் கூடுதலான சேவையை அளித்து வருகிறது.
அடுத்தக்கட்ட திட்டங்கள்
இந்நிலையில் பேடிஎம் தளத்தில் புதிதாக ஹோட்டல் புக்கிங் சேவையை வழங்க வேண்டும் எனத் திட்டமிட்ட பேடிஎம், புதிய தளத்தை உருவாக்காமல் ஏற்கனவே வர்த்தகத்தில் இருக்கும் நைட்ஸ்டே நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.
20 மில்லியன் டாலர்
பேடிஎம், நைட்ஸ்டே நிறுவனத்தைச் சுமார் 20 மில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. மேலும் இந்தச் செய்தி குறித்துப் பேடிஎம் பதில் அளிக்கவில்லை என்றாலும் நைட்ஸ்டே நிறுவனர் நசிர் கான் விளக்கம் செய்தியை உறுதி அளித்துள்ளார்.
வர்த்தகம்
நொய்டா தலைமையாகக் கொண்டு இயங்கும் நைட்ஸ்டே நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, சென்னை, ஹைதராபாத் ஆகிய நாட்டின் முக்கியமான நகரங்களில் வர்த்தகம் செய்து வருகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனம் 5 லட்ச டாலர்களை முதலீடாகப் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications