டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்திய அரசு பல பயன்பாட்டுச் செயலிகளை (apps) அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. இது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் பல்வேறு வகையிலும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட mPassport Seva என்னும் செயலி இந்தியாவில் எவ்விடத்திலிருந்தும் கடவுச் சீட்டுக்கு (passport) விண்ணப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையமும் cVigil என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதே போன்று அரசின் சேவைகளைப் பெறுவதற்கு ஏற்ற 20 வகையான பயன்பாட்டுச் செயலிகளைப் பற்றிய குறிப்புகள் இங்கே வழங்கப்படுகின்றன.
Indian Police on Call app : அருகில் உள்ள காவல் நிலையத்தை அறிந்து கொள்வதற்கான செயலி
இந்தச் செயலியின் மூலம், நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளலாம். அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் செல்வதற்கான வழி மற்றும் தூரம் ஆகியவை பற்றிய தகவல்களும் இதில் இடம் பெற்றிருக்கும். மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரின் தொலைப் பேசி எண்களும் இச்செயலியின் வழியே கிடைக்கும்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
ePathshala app
கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் வழங்கும் மின்- நூல்களைப் பெறுவதற்கான செயலி.
மத்திய மனித வள அமைச்சகம் (HRD) மற்றும் கல்வி, ஆராய்ச்சி & பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCERT) ஆகியன இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியுள்ளன. இச்செயலியின் மூலம் தேவையான நூல்களை, மொபைல் போன், டேப்லட், கணிப்பொறி ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நம்முடைய கருவிகளின் சேமிப்புத் திறனைப் பொறுத்து எத்தனை நூல்களை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குரலொலி மூலம் நூல் கருத்துக்களைக் கேட்டல் உட்படப் பல வசதிகளை இச்செயலி கொண்டுள்ளது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
mParivahan app
டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். வாகனப் பதிவுகளைப் பார்வையிடலாம்
இந்தச் செயலியின் மூலமாக நம்முடைய ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பழைய வாகனத்தை வாங்குபவர்கள், தாங்கள் வாங்கவிருக்கின்ற வாகனத்தைப் பற்றிய தகவல்களை இச்செயலியின் மூலம் முழுவதுமாக அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Startup India
புதியதாகத் தொழில் தொடங்க முனைபவர்களுக்கான செயலி.
புதியதாகத் தொழில் தொடங்குபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள், தொழில் துறையில் நிலவும் சூழல் ஆகியன குறித்த தகவல்களை இச்செயலி வழங்குகிறது. புதிய தொழில்களுக்கான அரசின் உதவிகள், தொழில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த தகவல்களையும் இச்செயலி வழங்கும்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
DigiSevak app
அரசின் திட்டங்களைப் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் தொண்டாற்ற உதவும் செயலி.
இந்தியாவின் வளர்ச்சிக்காகச் சேவையாற்ற விருப்பமா? அப்படியென்றால் இந்தச் செயலி உங்களுக்காகத்தான். சேவையாற்ற விரும்புபவரின் திறன் மற்றும் ஆர்வத்தைப் பொறுத்து அரசின் வெவ்வேறு துறைகளில் உள்ள திட்டப் பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் இந்தச் செயலியின் மூலமாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
GST Rate Finder
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த தகவல்களைத் தரும் செயலி.
எந்த வகையான பொருள்களுக்கு எவ்வகையான GST வரி விதிக்கப்படுகிறது என்பதில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட செயலிதான் இது. இச்செயலியைப் பதிவிறக்கம் செய்து கொண்டால் ஒவ்வொரு பொருளுக்கும், சேவைகளுக்குமான GST வரி விதிப்புத் தொடர்பான தகவல்களைத் துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
UMANG
அரசுத் துறைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட மொபைல் பயன்பாட்டுச் செயலி.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் மின்னாளுமைத் திட்டப் பிரிவு (NeGD) ஆகியவை இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளன. குடிமக்கள் அரசின் சேவைகளை விரைவாகவும் எளிமையாகவும் பெறுவதற்காக அரசின் அனைத்துத் துறைகளையும் அதனுடைய சேவைகளையும் ஒரே தளத்தில் கொண்டு இச்செயலி இயங்குகிறது. Aadhaar, DigiLocker, PayGov. போன்ற செயலிகளையும் இத்தளம் உள்ளடக்கியுள்ளது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Incredible India app
இது அரசின் சுற்றுலாத்துறைச் செயலி.
இந்தியச் சுற்றுலா தொடர்பான அனைத்துத் தகவல்களையும் இந்தச் செயலி கொண்டுள்ளது. சுற்றுலாத் திட்டங்கள், பயண முகவர்கள், தங்கும் விடுதிகள், சுற்றுலா மையங்கள் போன்ற தகவல்களை உள்நாடு மற்றும் அயல்நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பெறும் வகையில் இந்தச் செயலி இயங்குகிறது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
mPassport
பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தல், விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ளல், பாஸ்போர்ட் சேவை மையங்களைத் தெரிந்து கொள்ளல் ஆகியவற்றை ஸ்மார்ட் போன் உதவியுடன் நிறைவேற்றிக் கொள்ள இச்செயலி பயன்படுகிறது. பாஸ்போர்ட் தொடர்பான பிற தகவல்களையும் இச்செயலி வழங்குகிறது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
mAadhaar app
தனித்த அடையாளத்துக்கான இந்திய ஆணையத்தால் (UIDAI) உருவாக்கப்பட்ட செயலி இது. இது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் வழியாக ஆதார் அடையாளத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள உதவுகிறது. ஆதார் அடையாளம் தேவைப்படும் அலுவலகங்களுக்கு வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஸ்மார்ட் போன் வழியாகவே தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். பயனாளர்கள் இச்செயலியைப் பயன்படுத்தித் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளைப் பாதுகாத்திட முடியும்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Postinfo
இது அஞ்சல் துறையின் செயலி.
அஞ்சல் துறை சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட பார்சல்களின் நிலையை அறிந்து கொள்ளல், காப்பீட்டுப் பிரீமியத்தைக் கணக்கிடல், அஞ்சலகக் கட்டணங்களை அறிந்து கொள்ளல் போன்றவற்றுக்கு இச்செயலி உதவுகிறது. அஞ்சலக ஆயுள் காப்பீட்டுத்திட்டம் குறித்த தகவல்கள், செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை போன்றவற்றை இச்செயலியின் வழியே அறிந்து கொள்ளலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
MyGov
இச்செயலி இந்தியக் குடிமக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுகிறது. இந்திய அமைச்சகங்கள், அரசு அமைப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையான கருத்துக்களை இச்செயலியின் வழியே பயனாளர்கள் வழங்கலாம். அரசின் கொள்கைகள் மற்றும் நலத்திட்ட உருவாக்கங்களில் நம்முடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்வதற்கு இச்செயலி உதவுகிறது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
MySpeed (TRAI)
தொலைத் தொடர்பு மற்றும் இணையச் சேவை தொடர்பான செயலி இது. நாம் பயன்படுத்தும் இணையத் தொடர்பின் வேகம் நெட்வொர்க் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள இச்செயலி உதவுகிறது. தனிப்பட்டவர்களின் தகவல்களை இச்செயலி பகிர்ந்து கொள்ளாது. தொலைத் தொடர்பு மற்றும் இணையத் தொடர்பில் உள்ள குறைபாடுகளை இந்நிறுவனத்திற்கு இச்செயலியின் வழியே தெரியப்படுத்தலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
mKavach - மொபைல் போன்களின் பாதுகாப்புச் செயலி
ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு மட்டுமே இச்செயலி பொருந்தும். பொபைல் போன்களுக்கான அச்சுறுத்தல் குறித்த தகவல்களை இச்செயலி பகிர்ந்து கொள்கிறது. இச்செயலியின் மூலமாகத் தேவையற்ற அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றைத் தடுக்கலாம். மொபைல் போனில் உள்ள தகவல்களைப் பாதிக்கக் கூடிய மென்பொருள்கள் பற்றிய தகவல்களை இச் செயலியின் வழியாகத் தெரிவிக்கலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Swachh Bharat Abhiyaan
தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான செயலி இது. தூய்மைக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சம்பந்தப்பட்ட மாநகராட்சி நிர்வாகங்களுக்கு இச்செயலியின் வழியாக அனுப்பலாம். அனைத்து நகர உள்ளாட்சி அமைப்புகளும் இச்செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது குறித்த தகவல்களையும் இச்செயலி வாயிலாகத் தெரிவிக்கலாம்.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
BHIM
நிதிசார் நடவடிக்கைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்காக இந்தச் செயலி அரசுத் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியின் வழியாகப் பயனாளர்கள் பணத்தை அனுப்பவும், பெற்றுக் கொள்ளவும் முடியும். இதற்காக ஒருங்கிணைந்த செலுத்தும் இடைமுகம் (Unified Payment Interface (UPI) ) என்னும் செயலி செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த UPI செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
IRCTC
இந்தியக் குடிமக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அரசுத் துறை சார்ந்த பயன்பாட்டுச் செயலிகளுள் இதுவும் ஒன்று. ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்தல், முன் பதிவு செய்த சீட்டுகளை ரத்து செய்தல் போன்றவற்றுக்கு இச்செயலி துணை நிற்கிறது. வேகமான மற்றும் எளிமையான பரிமாற்றத்திற்காக IRCTC e-wallet - உடன் இணைந்து இச் செயலி இயங்குகிறது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Aaykar Setu
இந்திய வருமான வரித் துறையின் பல்வேறு வகையான சேவைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்தச் செயலி. இணையத்தின் மூலமாக வருமான வரிப் படிவம் தாக்கல் செய்தல், பான் (PAN ) அட்டைகளுக்காக விண்ணப்பித்தல், வருமான வரியைக் கணக்கிடல் போன்ற பல பயன்பாடுகளுக்கு இச்செயலி துணை புரிகின்றது. வரி செலுத்துவோரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் வகையில் பேசும் ரோபோ (chatbot) ஒன்றும் இச்செயலியில் உள்ளது.
இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்ய இதை கிளிக் செய்யவும்
Kisan Suvidha app : விவசாயிகளுக்கான செயலி.
பருவநிலை, மழைப் பொழிவு, விளை பொருட்களுக்கான சந்தை நிலவரம் போன்ற பல தகவல்களை விவசாயப் பெருங்குடி மக்கள் பெறும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டு உள்ளது. எப்பொழுது? என்ன பயிர் செய்யலாம்?, பயிர்களுக்கான பாதுகாப்புத் திட்டம் போன்ற தகவல்களையும் இச்செயலி வழங்குகிறது.
cVigil - தேர்தல் ஆணையச் செயலி (விரைவில் பயன்பாட்டுக்கு வரும்).
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள செயலிதான் cVigil. தேர்தல் தொடர்பான குற்றங்களைத் தடுக்கப் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக இந்தச் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. தேர்தலின் பொழுது நடைபெறும் சட்டத்துக்குப் புறம்பான செயல்கள், மக்களிடையே வெறுப்பு உணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சு ஆகியவை குறித்துத் தகுந்த ஆதாரங்களைப் பொதுமக்கள் இந்தச் செயலியின் மூலமாகத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பலாம்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications