இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மே 29-ம் தேதிக்குப் பிறகு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இன்று (05/07/2018) முதல் விலை உயர்ந்துள்ளது. அதே நேரம் டீசல் விலை 12 முதல் 13 பைசா வரை உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தனியார் பெட்ரோல் உற்பத்தி நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் இன்று நடைபெற்று வருகிறது.
ஒரு மாதத்திற்கு முன்பு மே 29-ம் தேதி பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தினைப் பொருத்து உயர்வது குறிப்பிடத்தக்கது.
சென்னை
பெட்ரோல் விலை இன்று சென்னையில் லிட்டர் ஒன்றுக்கு 78.57 ரூபாய் என்றும், சீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு 71.24 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி
டெல்லியில் இன்று பொட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 75.71 ரூபாய் என்றும், டீசல் ஒரு லிட்டர் விலை 67.50 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது.
மும்பை
மும்பையில் பெட்ரோல் 83.10 ரூபாய் லிட்டர் என்று விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டீசல் 71.62 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 78.39 ரூபாய் என்றும் டீசல் 70.5 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்படுகிறது.
உலகச் சந்தை
பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.46 புள்ளிகள் என 0.59 சதவீதம் உயர்ந்து 77.76 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. WTI கச்சா எண்ணெய் 0.20 புள்ளிகள் என 0.27 சதவீதம் உயர்ந்து 74.14 டாலர் ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications