ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் 2018 ஜூலை 5-ம் தேதி ஜியோ ஜிகா பைபர் என்ற ஒரு புதிய வணிகத்தினை அறிமுகம் செய்துள்ளார்.
எனவே ஜியோ ஜிகா பைபர் என்றால் என்ன? மற்றும் அதன் கீழ் என்ன சேவைகள் எல்லாம் வழங்கப்படும் என்று இங்குப் பார்க்கலாம்.
பிராட்பேண்ட்
ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் சேவை போன்றே ஜியோ ஜிகா பைபர் வணிகமானது இந்தியாவின் பிராட்பேண்ட் சேவைகளைப் புரட்டிப்போட உள்ளது.
ஜியோ ஜிகா பைபர் சேவையானது வீடுகளுக்கான பிராட்பேண்ட் சேவையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்ற நிலையில் வீடு, கடைகள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பெரிய நிறுவனங்கள் என 1,100 இடங்களில் இந்தச் சேவையினைப் பெற உள்ளனர்.
ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சிறப்பம்சம் என்ன?
இந்தியாவில் தற்போது உள்ள பிராட்பேண்ட் சேவைகள் எல்லாம் வீடு வரை பைபர் ஆக வந்தாலும் வீட்டிற்குள் பைபராக இல்லை. அதனால் இணையதள வேகமும் குறைவாக உள்ளது. ஆனால் ஜியோ பைபர் பிராட்பேண்ட் அப்படி இருக்காது என்று கூறப்படுகிறது.
தொலைக்காட்சி
ஜியோ ஜிகா பைபர் சேவை மூலம் டிவி, வீடியோ கான்பிரன்சிங், வாய்ஸ் அடிப்படையிளான விரிச்சுவல் அசிஸ்டண்ட் உதவி, விரிச்சுவல் ரியாலிட்டி கேமிம்க், டிஜிட்டல் ஷாப்பிங் போன்றவையும் வழங்கப்பட உள்ளது. ஜியோ ஜிகா பைபர் கீழ் 600-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பெற முடியும் என்றும் கூடுதல் தகவல்கள் கூறுகின்றன.
விண்ணப்பங்கள்
ஜியோ ஜிகா பைபர் மற்றும் ஜியோ போன் 2 என இரண்டு சேவைகளையும் பெற 2018 ஆகஸ்ட் 15 முதல் பதிவு விண்ணப்பிக்கலாம்.
பிற சேவைகள்
ஜியோ ஜிகா பைபர் சேவை மூலம் வீடுகளை ஸ்மார்ட்டாக மாற்றும் சேவையினை அறிமுகம் செய்ய உள்ளனர். எங்கு இருந்து வேண்டுமானாலும் வீட்டை கண்காணிக்கும் சேவை, பாதுகாப்புத் தீர்வுகள் போன்றவையும் வழங்கப்பட உள்ளன. இதில் வீட்டினை திறப்பது, மூடுவது, ஏசி அளவை மாற்றுவது, விளக்குகளை ஆன் / ஆப் செய்வது, போன்ற பல வசதிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மானவர்கள்
ஜியோ ஜிகா பைபர் சேவை மூலம் மாணவர்கள் தங்களது ஆசிரியர்கள் எளிதாக அணுகி தங்களது சந்தேகங்களுக்குத் தீர்வுகளைப் பெற முடியும் என்று கூறுகின்றனர்.
யாருக்கு முதலில் இந்தச் சேவை கிடைக்கும்?
ஆகஸ்ட் 15 முதல் ஜியோ ஜிகா பைபர் சேவைக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில் எங்கு அதிக நபர்கள் விண்ணப்பிக்கிறார்களோ அங்குத் தான் முதலில் சேவைகளைப் பெறுவார்கள் என்று அம்பானி கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications