பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களால் 7 கோடி ரூபாய் நட்டம் அடைந்த எஸ்பிஐ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்களுக்கு இலவசம் என்று கூறிவிட்டால் போதும் அங்குச் சென்று வரிசையில் நின்று விடிவோம். இதுவே ஒரு பொருளை ஆர்டர் செய்த பிறகு ரத்து செய்தால் இரண்டு பணத்தினை ரீஃபண்டு பெற முடியும் என்றால் நினைத்துப் பாருங்கள்.

 

இப்படி ஒரு ஓட்டை பிளிப்கார்ட் இணையதளத்தில் இருந்துள்ளது. எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்தும் 39 வாடிக்கையாளர்கள் இதுப்போன்று பிளிப்கார்ட் இணையதளத்தில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். வங்கியும் இரண்டு முறை வாடிக்கையாளர்களுக்கு ரீஃபண்டு அளித்து வந்து இருக்கிறது.

 மோசடி எங்கு நடைபெற்றது?

மோசடி எங்கு நடைபெற்றது?

குஜராத்தின் மெஹ்சானா, பதான் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் 39 எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பிளிப்கார்ட் இணையதளத்தில் பொருட்களை ஆர்டர் செய்த பிறகு அதனை ரத்துச் செய்வது பின்னர்ப் பிளிப்கார்ட் மூலம் ஒரு முறையும், சில நாட்களில் வங்கியில் இருந்து ஒரு முறையும் ரீபண்டு பணத்தினைப் பெறுவது என மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகரித்த மோசடி

அதிகரித்த மோசடி

பிளிப்கார்ட் இணையதளத்தில் ஓட்டை உள்ளது என்று அறிந்த வாடிக்கையாளர்கள் அதனைத் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர இந்த மோசடியானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது.

இழப்பு
 

இழப்பு

கடந்த ஒரு வருடமாகப் பிளிப்கார்ட் இணையதளத்தில் இந்த மோசடி நடைபெற்று வந்த நிலையில் 39 வங்கி கணக்குகளில் இருந்து 1,090 பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு அதனை இரத்து செய்ததன் 7 கோடி ரூபாய் வரை பணத்தினை வங்கி இழந்துள்ளது.

 எங்குத் தவிர நடந்தது?

எங்குத் தவிர நடந்தது?

இந்த மோசடியில் பெரும்பாலும் மாணவர்களே அதிகளவில் ஈடுபட்ட நிலையில் விசா கார்டு சேவையில் சென்ற வருடம் செய்யப்பட்ட புதிய அப்டேட்டில் இந்த ஓட்டை இருப்பது கண்டறியப்பட்டு இந்த மோசடி நடைபெற்று வந்த நிலையில் அந்தப் புதுப்பித்தல் சேவையினை விசா நிறுவனம் நீக்கியுள்ளது.

 எஸ்பிஐ

எஸ்பிஐ

எஸ்பிஐ வங்கி இது குறித்து இன்னும் விசாரணையில் ஈட்டுப்பட்டு வரும் நிலையில் பழைய மற்றும் புதிய மென்பொருள் மாற்றத்தின் போது அமைப்பில் ஏற்பட்ட சிக்கல் தான் இழப்பிற்கான காரணமாக அமைந்துள்ளது. இந்த மோசடியில் ஈட்டுப்பட்ட வாடிக்கையாளர்கள் மீது வழக்கு தொடர முடியுமா என்றும் வங்கி நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI loses ₹7 crore as Flipkart users get double refund

SBI loses ₹7 crore as Flipkart users get double refund
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X