நெஸ்ட்லே இந்தியா நிறுவனம் சாக்லேட், பால் பொருட்கள், பிஸ்கேட் போன்ற பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வந்தாலும் அதன் மேக் நூடல்ஸ் மட்டும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறது.
சில ஆண்டுகளாகவே நெஸ்ட்லேவின் மேகி நூடல்ஸ் மீது இந்தியா உட்படப் பல்வேறு நாடுகளில் புகார்கள்,சர்ச்சைகள் என்று இல்லாமல் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் அப்படித் தடை செய்யப்பட்டு மீண்டு மேகி நூடல்ஸ் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தின் சாட்டார்புர் என்ற இடத்தில் 9 குழந்தைகளின் வீட்டில் மேகி சாப்பிட்டு உடல் நலம் மோசம் அடைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகின.
இது குறித்து மேகி நிறுவனம் விசாரணை செய்ததாகவும் அந்தக் குழந்தைகள் சாப்பிட்டது மேகி நூடல்ஸ் அல்ல, எங்களது பிராண்டு அல்ல. ஏதோ ஒரு உள்ளூர் நிறுவன தயாரிப்பு அது என்றும் விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications