ரஷ்யா உடன் இணைந்து 5-ம் தலைமறை போர் ஜெட் விமானத்தினை உருவாக்க முடிவு செய்து இருந்த நிலையில் பொருட் செலவினை கணக்கில் கொண்டு இந்தியா மறு பரிசீலனை செய்ய இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
உலகளவில் மிகப் பெரிய இணைவாக இது பார்க்கப்பட்ட நிலையில் இந்தியாவின் இந்த முடிவு ஏமாற்றத்தினை அளித்து வருகிறது.
கூட்டு
இந்தியா, ரஷ்யா இடையில் இரண்டு நாட்டு ராணுவமும் இணைந்து அடுத்தக் கட்டத்திற்குச் செல்வது, மற்றும் கூட்டாகத் தொழில்நுட்பத்தினைப் பகிர்ந்து ஜெட் விமானங்களை உருவாக்குவது என்பதற்காக 2007-ம் ஆண்டே இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுக் கடந்த 11 வருடங்களாக முன்னேற்றம் இல்லாமல் உள்ளது.
மதிப்பு
இரண்டு நாடுகளும் இணைந்து போர் ஜெட் விமானங்கள் உருவாக்க 2 லட்சம் கோடி ரூபாயினை முதலீடு செய்ய இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பணம்
இந்திய அரசு ஜெட் விமான உற்பத்தி திட்டத்தினை மறு பரிசீலனை செய்ய முக்கியக் காரணம் பணம் தான் என்றும் அதனை ரஷ்யா உடன் முன்பே தெரிவித்தும் அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அதிகாரி ஒருவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
இரகசிய தொழில்நுட்பங்கள்
இந்தியா - ரஷ்யா கூட்டாக இந்தப் போர் ஜெட் விமானங்களைத் தயாரிக்க முடிவு செய்து இருப்பினும் இருவருக்கும் சரி சமமான உரிமைகள் இருக்கும் என்று கூறப்பட்டும், தொழில்நுட்பத்தின் முக்கிய இரகசியங்களைப் பகிர முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளதும் ஒரு காரணம் என்று டெல்லியில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பேச்சுவார்த்தை
முக்கியத் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தியாவுடன் விவரங்களைப் பகிர வேண்டும் என்று பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை இரண்டு நாடுகளின் அரசுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ளது. 2016-ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பார்க்கர் தலைமையில் கூட இரண்டு நாடுகள் இடையில் மறு பரிசீலனை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்துஸ்தான் ஏரோனட்டிக்கல்ஸ் லிமிட்டட்
அரசு தரப்பு இந்தத் திட்டத்தினை மறு பரிசீலனை செய்து வந்தாலும் இந்துஸ்தான ஏரோனட்டிக்கல் லிமிடட் நிறுவனம் இணையலாம் என்றே அவர்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடும் இணைந்து செயல்படும் போது இந்திய விண்வெளி துறை மிகப் பெரிய வளர்ச்சியினை எட்டும் என்றும் எந்த ஒரு நாடும் இது போன்ற முக்கிய இரகசியங்களைப் பகிராது என்றும் கூறுகிறது.
விமானப் படை
இந்திய விமானப் படை இந்தத் திட்டத்திற்கு அதிகச் செலவாகிறது என்பதால் மத்திய அரசுக்குப் பெரியதாக அழுத்தும் தெரிவிக்கவில்லை என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
More From GoodReturns

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications