பொதுத் தேர்தல் இன்னும் ஒரு வருடத்திற்குள் வர உள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் பொருளாதாரத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்து வாக்குகள் பெறுவது என்பது எல்லாம் முடியாத காரியம் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
மோடி தலைமையிலான அரசு தங்களது வாக்குறுதிகளைப் பூர்த்திச் செய்ய வேண்டும் என்றால் மேலும் 5 ஆண்டுகள் தேவைப்படும் என்றும் இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஓட்டு கிடைக்காது
பொருளாதார வல்லுநர் மற்றும் புள்ளியியலாளரான சுப்பிரமணியன் சுவாமி பாஜகவிற்குப் பொருளாதார வளர்ச்சியால் ஓட்டு கிடைக்காது என்று குறிப்பிட்டுள்ளார். வாஜ்பாய் இந்தியா ஒளிர்கிறது என்று தோல்வி தான் அடைந்தார் என்று கூறியுள்ளார்.
2014 வெற்றி
மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமியை பொறுத்தவரையில் 2014-ம் ஆண்டுப் பொதுத் தேர்தலின் போது பாஜக வெற்றிபெற முக்கியக் காரணங்களாக இருந்தது இந்துத்துவா மற்றும் ஊழல் அற்ற ஆட்சி என்பதே காரணம் ஆகும்.
பிராச்சாரம்
ஆனால் 2014-ம் ஆண்டுத் தேர்தல் பிரச்சாரங்களில் மோடி பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்குதல், உழல் இல்லா இந்தியா போன்றவற்றை முன்னிறுத்தி தான் பேசியுள்ளார். இந்துவா அல்லாது ராமர் கோவில் பற்றி எல்லா எங்கும் குறிப்பிடவில்லை.
முக்கியச் சீர்திருத்தங்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இது வரை சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மற்றும் ஐபிசி எனப்படும் திவால் சட்டம் என இரண்டு முக்கியச் சீர்திருத்தங்களைச் செய்துள்ளது.
அதில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்து இருந்தாலும் எளிமையானதாக இல்லை, இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியுள்ளது. ஐபிசி திவால் சட்டம் இப்போது தான் துவங்கியுள்ளது. இவை இரண்டும் இந்திய பொருளாதாரத்திற்கான முதுகெலும்புகள் ஆகும்.
சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி ஏற்கனவே தனது சொந்த கட்சியான பாஜக தலைமையிலான அரசின் பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து முன்பு கருத்து தெரிவித்து இருந்த சுப்பிரமணியன் சுவாமி இது நல்ல ஐடியா ஆனால் அதற்கு முறையாகத் தயாராகாததால் தோல்வி அடைந்தது. ஜிஎஸ்டி முட்டாள்தனமானது என்றும், இந்தியா அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியினைப் பெறவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.
நிதி அமைச்சர்
ஒரு முறை இந்தியாவின் நிதி அமைச்சராக நான் இல்லை என்பதால் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications