ஐடியா - வோடாபோன் நிறுவனங்கள் ஜூன் மாதமே இனையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதமான நிலையில் இதற்கு என்ன காரணம் எனப் பிரதமர் அலுவலகம் தொலைத்தொடர்பு துறையினைக் கேள்வி கேட்டுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இரண்டு நிறுவனங்களும் இணைவதற்கான அனுமதிகளை முழுமையாகப் பெற்றுள்ள நிலையில் தொலைத்தொடர்பு துறைக்குச் சட்டப்பூர்வமாகச் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இணைவு
வோடாபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணையும் போது வோடாபோன் ஐடியா என்று பெயர் மாற்றம் பெறும் என்று கூறப்படுகிறது. முழுமையானாக இணைந்த பிறகு இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்கான ஏர்டெல் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு முதல் இடத்தினை வோடாபோன் ஐடியா பிடிக்கும்.
தாமதத்திற்கான காரணம்
பிரதமர் அலுவலகம் ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் இணைவு தாமதம் ஆவதற்கான காரணங்களைக் கேட்ட போது சில சட்டப்பூர்வமான கருத்துக்கள் தேவைப்படுகிறது என்று அதனைப் பெற்றவுடன் உடனடியாக இரண்டு நிறுவனங்களும் இணையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு என்ன அக்கரை
தனியார் நிறுவனங்கள் இணைவதன் மீது மத்திய அரசுக்கு என்ன அக்கரை என்று கேட்ட போது இது குறித்து விவரம் அறிந்தவர்கள் "இரண்டு நிறுவனங்களும் இணைந்தால், இந்தியாவில் வணிகம் செய்வது எளிமை" என்பதற்கான உதாரணமாகக் கட்டவே என்று தெரியவந்தது.
வரி சிக்கல்
வோடாபோன் நிறுவனம் நீண்ட காலமாக இந்திய அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி சிக்கலும் இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்குத் தாமதமாக உள்ளது. இதற்காக வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இது போன்று வேறு ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சட்ட விளக்கம்
வோடாபோன் மொபைல் சேவைகள் மற்றும் அதன் 6 துணை நிறுவனங்கள் 2014-2015 நிதி ஆண்டில் இணைந்தன. அப்போது செலுத்த வேண்டிய ஸ்பெகட்ர்ம் அலைக்காற்று கட்டணத்தினையும் செலுத்தின. தற்போது வொடாபோன் உடன் இணையும் போது முந்தைய இணைவு பற்றிய விளக்கங்களையும் தொலைத்தொடர்பு நிறுவனம் கோரியுள்ளது.
அதில் வோடாபோன் துணை நிறுவனமான ஓடிஎஸ்சி-க்கு 8,100 கோடி ரூபாய் அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் ஆனால் 2,450 கோடி ரூபாய் தன் அளித்துள்ளனர். மீத தொகை செலுத்துவது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இது போன்று ஐடியா நிறுவனமும் சில கட்டணங்களைச் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது. இது போன்ற சட்ட விளக்கங்களுக்காகத் தான் தொலைத்தொடர்பு துறை காத்திருக்கின்றது.
ஜியோ
வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் இணைந்து இந்தியாவின் மிகப் பெரிய நெட்வொர்க்காக மாறினாலும் ரிலையன்ஸ் ஜியோவின் தாக்கத்தினைச் சமாளிக்க முடியாமல் திணறும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications