இந்திய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பிரதமர் மோடியின் 1000 ரூபாய் மற்றும் பழைய 500 ரூபாய் நோட்டுகளின் தடை அறிவிப்பு நாட்டில் பல பிரச்சனைகளை உருவாக்கியது மட்டும் அல்லாமல் மக்கள் தங்களின் அன்றாடச் செலவிற்குக் கூடப் பணமில்லாமல் தவிக்கும் சூழ்நிலை உருவானது.
பணப் பற்றாக்குறை
இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணப் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என மத்திய அரசு 2000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ராணுவ விமானத்தின் மூலம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்தது.
விநியோகம்
இந்த விநியோக பணிக்கு இந்திய விமானப் படையின், சி 17 மற்றும் சி 130ஜே ரக விமானத்தைப் பயன்படுத்திச் சுமார் 91 முறை இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.
29.41 கோடி ரூபாய்
இந்த விமான விநியோக பணிகளுக்கு மட்டும் மத்திய அரசு செலவு செய்த தொகை 29.41 கோடி ரூபாய். முன்னாள் விமானப் படை அதிகாரி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம்
மோடி 1000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் தடை அறிவிப்பின் மூலம் நாட்டில் கருப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்படும் எனக் கூறி இந்த அறிவிப்பு வெளியானது. ஆனால் நாட்டில் கருப்புப் பணம் முழுமையாக ஒழிக்கப்பட்டதா என்றால் நிச்சயம் இல்லை என்ற கூற முடியும்.
86 சதவீத பணம்
பணமதிப்பிழப்பால் ஏற்படும் பாதிப்புகள், பின் விளைவுகள், மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் என எதுவும் தெரியாமல் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் இந்தியாவில் சுமார் 86 சதவீத பணப் புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications