உலகின் முன்னணி எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் நொய்டாவில் 35 ஏக்கர் பரப்பளவில் சுமார் புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு தொழிற்சாலையைச் சாம்சங் துவங்கியுள்ளது.
இந்தத் தொழிற்சாலையை இன்று பிரதமர் மோடி மற்றும் தென் கொரிய நாட்டின் அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் இணைந்து துவங்கி வைக்கின்றனர்.
ஜூன் 2017
கடந்த வருடம் ஜூன் மாதம் சாம்சங் நிறுவனம் நொய்டாவில் இருக்கும் தனது உற்பத்தி தளத்தை விரிவாக்கம் செய்ய 4,915 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை அறிவித்துத் தனது விரிவாக்கப் பணிகளைத் துவங்கியது.
உற்பத்தித் திறன்
சாம்சங் நிறுவனத்தின் திட்ட படி, தற்போது 67 மில்லியன் ஸ்மார்ட்போன் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கத்தின் மூலம் சுமார் 120 மில்லியன் போன்களைத் தயாரிக்கும் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
மேலும் சாம்சங் தமிழ்நாட்டிலும் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை வைத்துள்ளது.
இந்தியா தான் உற்பத்தி களம்
சாம்சங் நிறுவனத்தின் சர்வதேச சந்தை வர்த்தகத்திற்குத் தேவையான சாதனங்களை 10 சதவீதம் மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லும் நிலையில், அடுத்த 3 வருடத்தில் இதன் அளவை 50 சதவீதம் வரையில் உயரும் எனத் தெரிகிறது.
இதன் மூலம் சாம்சங் நிறுவனத்திற்கு ஆஸ்தான உற்பத்தி களமாக இந்தியா இருக்கப்போகிறது.
வேலைவாய்ப்பு
ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் இந்திய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையில் 70,000 பேர் பணியாற்றும் நிலையில், இப்புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 15,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிகிறது.
1990 முதல்...
சாம்சங் முதன் முதலாக 1990இல் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை அமைத்தது, இதன் பின் 1997இல் டிவி தயாரிப்புக்காகத் தனிப்பட்ட தளத்தை அமைத்தது. 2005ஆம் ஆண்டு மொபைல் போன் பயன்பாடு அதிகரித்த நிலையில் இதற்காகப் பிரத்தியேகமாக ஒரு தொழிற்சாலையை அமைத்தது சாம்சங்.
பிற சாதனங்கள்
தற்போது செய்யப்பட்டுள்ள விரிவாக்கப் பணிகள் ஸ்மார்ட்போன் தயாரிப்புக்காக மட்டும் இல்லை, இந்நிறுவனத்தின் பிரிட்ஜ், டிவி, ஏசி ஆகிய பிற எலக்ட்ரானிக் சாதனைகளைத் தயாரிக்கவும் அதனை முறையாக வர்த்தகப்படுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு இப்புதிய விரிவாக்கப் பணிகளைச் செய்து வருகிறது.
மொபைல் தொழிற்சாலை
4,915 கோடி ரூபாய் முதலீட்டில் சாம்சங் செய்த விரிவாக்கப் பணிகள் மூலம் உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலையாகத் தற்போது நொய்டா தொழிற்சாலை விளங்குகிறது.


Click it and Unblock the Notifications