இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனத்தின் டாப் 10 பங்குதாரர்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டென்ஸி சர்வீஸ், நாட்டின் அதிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் டிசிஎஸ் நிறுவனம் நாட்டின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக மாறியது.

இந்தக் கட்டுரையில் டிசிஎஸ் நிறுவனத்தின் டாப்10 பங்குதாரர்கள் பற்றிக் காணலாம். டிசிஎஸ் நிறுவனத்தின் 2017-18 நிதியாண்டின் ஆண்டு அறிக்கை அடிப்படையிலான இப்பட்டியலில், அந்நிறுவனத்தின் இயக்குனர்கள், ஜிடிஆர் மற்றும் ஏடிஆர் வைத்திருப்பவர்கள் இடம்பெறவில்லை.

எல்.ஐ.சி

எல்.ஐ.சி

டிசிஎஸ் நிறுவனத்தின் 2017-18 நிதியாண்டின் ஆண்டு அறிக்கை அடிப்படையில், எல்.ஐ.சி நிறுவனம் 7,53,84,947 பங்குகளை வைத்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 3.9% ஆகும்.

எப்.எஸ்.ஐ.ஐ - எஸ்.ஐ.ஏ.பி.எல்.எப்

எப்.எஸ்.ஐ.ஐ - எஸ்.ஐ.ஏ.பி.எல்.எப்

2017-18 நிதியாண்டின் ஆண்டு அறிக்கையில் எப்.எஸ்.ஐ.ஐ - எஸ்.ஐ.ஏ.பி.எல்.எப்(First State Investment Icvc-Stewart Investors Asia Pacific Leaders Fund) 1,50,54,489 பங்குகள் வைத்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவன மொத்த பங்குகளில் இது 0.8%.

லாசர்டோ எமெர்ஜிங் மார்கெட்ஸ் ஈக்விட்டி போர்ட்போலியோ

லாசர்டோ எமெர்ஜிங் மார்கெட்ஸ் ஈக்விட்டி போர்ட்போலியோ

பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ள இந்நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தில் 98,19,005 பங்குகளை வைத்திருக்கிறது. இது மொத்த பங்குகளில் 0.5% ஆகும்.

ஒபன்ஹெய்மர் டெவலப்பிங் மார்கெட்ஸ் பண்ட்

ஒபன்ஹெய்மர் டெவலப்பிங் மார்கெட்ஸ் பண்ட்

79,96,009 பங்குகளுடன் இந்நிறுவனம் பட்டியலில் 4ம் இடம் பெற்றுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் 2017-18 நிதியாண்டின் ஆண்டு அறிக்கையின் படி இந்நிறுவனம், மொத்த பங்குகளில் 0.4% சதவீதத்தை வைத்துள்ளது.

 எச்.டி.எப்.சி டிரஸ்டி கம்பனி லிமிட்டட்

எச்.டி.எப்.சி டிரஸ்டி கம்பனி லிமிட்டட்

டிசிஎஸ் நிறுவனத்தின் 5வது மிகப்பெரிய பங்குதாரரான இந்நிறுவனம், 76,45,593 பங்குகளை வைத்துள்ளது. இது மொத்த பங்குகளில் 0.4% ஆகும்.

வான்கார்டு எமர்ஜிங் மார்கெட்ஸ் ஸ்டாக் இன்டக்ஸ் பண்ட்

வான்கார்டு எமர்ஜிங் மார்கெட்ஸ் ஸ்டாக் இன்டக்ஸ் பண்ட்

டிசிஎஸ் நிறுவனத்தின் 2017-18 நிதியாண்டின் ஆண்டு அறிக்கையின் படி இந்நிறுவனம் 75,95,080 பங்குகளை வைத்துள்ளது.

 எஸ்.பி.ஐ மியுட்சுவல் பண்ட்ஸ்

எஸ்.பி.ஐ மியுட்சுவல் பண்ட்ஸ்

இப்பட்டியலில் 7ம் இடம் பிடித்துள்ள இந்நிறுவனம், 2017-18 நிதியாண்டு இறுதியில் 70,56,720 பங்குகளை வைத்திருந்தது. இது டிசிஎஸ் நிறுவன மொத்த பங்குகளில் 0.4% ஆகும்.

 சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூர் அரசு

டிசிஎஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கும் சிங்கப்பூர் அரசு, 2017-18 நிதியாண்டு முடிவில் அந்நிறுவனத்தின் 64,97,754 பங்குகளை வைத்திருந்தது.

அபுதாபி முதலீட்டு ஆணையம்

அபுதாபி முதலீட்டு ஆணையம்

பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ள இந்நிறுவனம், டிசிஎஸ் நிறுவனத்தின் 62,96,384 பங்குகளை வைத்துள்ளது. இது மொத்த பங்குகளில் 0.3% ஆகும்.

வான்கார்டு டோட்டல் இன்டர்நேசனல் ஸ்டாக் இன்டக்ஸ் பண்ட்

வான்கார்டு டோட்டல் இன்டர்நேசனல் ஸ்டாக் இன்டக்ஸ் பண்ட்

டிசிஎஸ் நிறுவனத்தின் 61,79,273 பங்குகளை வைத்திருக்கும் இந்நிறுவனம், பட்டியலில் 10ஆம் இடத்தில் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+