ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள்.. சொல்கிறார் ஜான் மெக்கஃபி..!
சைபர் பாதுகாப்பு வல்லுநர் மற்றும் கிரிப்டோகரன்சி வழக்கறிஞருமான ஜான் மெக்கஃபி ஆர்பிஐ உடன் வணிகம் செய்து வரும் நிதி நிறுவனங்களைப் புறக்கணியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஆர்பிஐ கிரிப்டோகரன்ஸி வர்த்தகம் மீது வங்கிகளுக்கு விதித்து இருந்த தடையினை இரத்துச் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து இந்தக் கருத்தினை ஜான் மெக்கஃபி கூறியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ஜூலை 5-ம் தேதி முதல் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கிடையிலான சேவையினை நிறுத்து வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications