தமிழக அரசியலில் வெற்றிடத்தை உருவாக்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, அப்பலோ சிகிச்சை குறித்த சர்ச்சைகளுக்கு இன்னமும் விடை தெரியாமல் இருக்கிறது.
இந்நிலையில் ஜெயலலிதா பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருக்கும் சேமிப்புக் கணக்கில் வெறும் 9000 ரூபாய் மட்டுமே உள்ளது என அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
9,000 ரூபாய்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தமிழ்நாட்டை மட்டும் அல்ல இந்தியாவையே திரும்பி பார்க்கவைத்த நிலையில் தற்போது சசிகலா தரப்பு வழக்கறிஞர் ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமியிடம் குறுக்கு விசாரணை செய்யும் போது, ஜெயலலிதா வங்கி கணக்கில் 9,000 ரூபாய் மட்டுமே உள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சசிகலா
அதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலா-வின் வங்கி கணக்கில் 3 லட்சம் ரூபாய் உள்ளதாக ஐஓபி வங்கியின் முன்னாள் மேலாளர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
விசாரணை
சசிகலா தரப்புத் தன்னிடம் ஜெயலலிதாவின் வங்கி கணக்கு குறித்து விசாரணை நடத்தியதாகவும் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி
ஜெயலலிதா இறப்பு குறித்து பல்வேறு தரப்பில் இருந்து சந்தேகம் எழுந்த நிலையில் அதனை விசாரிக்க ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு என்ன செய்தார் 'ஜெயலலிதா'..!
28கிலோ தங்கம், 800கிலோ வெள்ளி..
பிளாஷ்பேக்:
113.73 கோடி ரூபாய் சொத்து என்ன ஆனது..?
பிளாஷ்பேக்:


Click it and Unblock the Notifications