இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் துறை நிறுவனத்தைக் கைப்பற்றிய OYO..!
மலிவு விலையில் ஹோட்டல் ரூம்களைப் புக் செய்ய மக்களுக்கு ஏதுவான ஒரு தளத்தை அமைத்து வெற்றிகரமாக இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்ற OYO நிறுவனம் தற்போது அடுத்தக் கட்டத்திற்குச் செல்லப் புதிதாக ஒரு நிறுவனத்தை வாங்கியுள்ளது.
உலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இண்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஏபில்பிளஸ் (AblePlus) என்னும் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் OYO நிறுவனம், ஏபில்பிளஸ்-இன் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவையை அளிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் இப்புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ஹோட்டல் புக்கிங் சேவையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என OYO நிறுவனம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications