ஹிந்தியில் கலக்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கு 2017ஆம் ஆண்டு வந்து பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. கடந்த வருடம் ஒவியாவின் ஆட்டம், ஆரவ்-இன் மருத்துவ முத்தம், காயத்ரி- ஆர்த்தியின் சேட்டைகள், கமலின் குறும்படம் எனக் கலகலப்பாக இருந்த நிலையில் டிஆர்பியும் சிறப்பாக இருந்தது.
பிக் பாஸ் 2
இந்நிலையில் தமிழ் பிக் பாஸ்-இன் 2வது சீசன் தற்போது துவங்கியுள்ளது, முதல் சீசன் சிறப்பாக இருந்த காரணத்தால் மக்கள் மத்தியில் 2வது சீசனுக்கு அதிகளவிலான எதிர்பார்ப்பு இருந்தது.
டிஆர்பிஐ பார்க்கும் போது, பிக் பாஸ் 2வது சீசன் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
BARC அமைப்பு
பிக் பாஸ் 2 சீசன் ஜூன் 17ஆம் தேதி துவங்கிய நிலையில் BARC அமைப்பின் ரேடிங் படி ஜூன் 23 மற்றும் ஜூன் 29 வரையிலான காலத்தில் டாப் 5 நிகழ்ச்சியில் ஒரு இடத்தில் கூடப் பிக்பாஸ் வரவில்லை.
சன் டிவி ஆதிக்கம்
தலைசிறந்த நிகழ்ச்சிகளில் முதல் 5 இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தான், இதில் முதல் இடத்தைப் பிடித்ததை நாயகி, அதைத் தொடர்ந்து நந்தினி, அரண்மனை 2, அழகு, கல்யாண வீடு ஆகியவை இடம் பெற்றுள்ளது.
ஸ்டார் விஜய் 3வது இடம்
மேலும் தொலைக்காட்சி வரையில் சன் டிவி, ஜி தமிழ், ஸ்டார் விஜய், கே டிவி, கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்கள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications