இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய பெருமைக்குரிய நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 2018-2019 நிதி ஆண்டுக்கான ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டு அறிக்கையினைச் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் காலாண்டு அறிக்கையில் 7,340 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ரியூட்டர்ஸ் 7,014.30 கோடி ரூபாய் ஆக இருக்கும் என்று கணித்து இருந்தது. அதே நேரம் டிசிஎஸ்-ன் வருவாய் 6.8 சதவீதம் உயர்ந்து 34,261 கோடி ரூபாயாக உள்ளது.
வருவாய்
2017-2018 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டு முடிவில் டிசிஎஸ் நிறுவனம் 6,904 கோடி ரூபாயினை நிகர லாபமாகவும், 32,075 கோடி ரூபாயினை வருவாய் ஆகவும் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்ரேட்டிங் மார்ஜின்
சென்ற காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் மார்ஜின் 25.4 சதவீதமாக இருந்த நிலையில் முதல் காலாண்டில் 25 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பங்குகள்
டிசிஎஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கை இன்று வெளியாக இருந்த நிலையில் பங்குகள் விலை 10.5 புள்ளிகள் என 0.56 சதவீதம் சரிந்து 1,877 ரூபாய்க் காக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
வல்லுநர்கள்
வல்லுநர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் மார்ஜின் சரிவுக்கு ஊதிய உயர்வு, விசா செலவு உயர்வு, உள்ளூர் முதலீடுகள் போன்றவை காரணங்கள் எனத் தெரிவித்துள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications