இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டெக் மஹிந்திரா நிறுவனத்தைத் தலைவரான சி.பி. குர்நானி 2017-18ஆம் ஆண்டில் சுமார் 149.19 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
அவரது சம்பளம் நாட்டின் முன்னணி ஐடி நிறுவன தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
5 வருட சம்பளம்
அதேபோல் கடந்த 5 வருடத்தில் சி.பி. குர்நானி சுமார் 510 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யம் கம்பியூட்டரஸ் நிறுவனத்தைக் கைப்பற்றி மஹிந்திரா குழுமம் ஐடி சேவையை இறங்கிய நிலையில், மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே நிலைப்பெற்று நாட்டின் 5வது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகத் திகழ்கிறது.
9 சிஇஓ
இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் நாட்டின் 4 முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவற்றில் பணியாற்றிய 9 சிஇஓக்களும் சேர்ந்து 387.92 கோடி ரூபாயை மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ள நிலையில், குர்நானி இவர்கள் அனைவரையும் விடவும் 24 சதவீதம் அதிகமாக 510 கோடி ரூபாய்ச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
துணைத் தலைவர்
இதேபோல் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் துணை தலைவரான வினித் நாயர் இந்த வருடம் ஓய்வு பெறும் நிலையில், கடந்த 5 வருடத்தில் 363.13 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
900 கோடி ரூபாய் சம்பளம்
இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் டெக் மஹிந்திரா நிர்வாகம் குர்நானி மற்றும் வினித் ஆகிய இரு உயர் அதிகாரிகளுக்கு மட்டும் சுமார் 873.16 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
பங்குகள்
குர்நானி மற்றும் வினித் ஆகியோரின் சம்பளத்தில் அதிகளவில் டெக் மஹிந்திரா பங்குகளாகவே அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை விடவும் அவர்களது சம்பளம் அதிகமாக உள்ளது.
வேலைத் திறன்
மேலும் இருவரின் சம்பளமும் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுத்தே அமைகிறது என டெக் மஹிந்திரா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
டெக் மஹிந்திரா
டிசிஎஸ், இன்போசிஸ் நிறுவனங்களை விடவும் டெக் மஹிந்திரா சிறிய நிறுவனமாக இருந்தாலும், தற்போது இந்திய மென்பொருள் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய நிறுவனம் என்றால் அது டெக் மஹிந்திரா தான்.
இத்தகைய நிலையை உருவாக்கியதற்குக் குர்நானி மற்றும் வினித் ஆகியோர் காரணம் என்றால் மிகையாகாது.


Click it and Unblock the Notifications