ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்திய டெலிகாம் சந்தையில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தனது நிலையை வலிமைப்படுத்திக்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்களுக்கு எதிராக 4ஜி நெட்வொர்க்-ஐ விரிவாக்கம் செய்ய நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளது.

1 பில்லியன் டாலர்
அதீத கடனில் இருக்கும் ஏர்டெல் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து 1 பில்லியன் டாலர் அதாவது 6,900 கோடி ரூபாய் அளவிலான நிதியை கடன் பெற்று, 4ஜி நெட்வொர்க் விரிவாக்கத்தில் முதலீடு செய்ய உள்ளது.
இதற்காக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் மிட்டல் முதலீட்டு வங்கியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஒரு மாதம்
ஏர்டெல் திட்டமிட்ட படி வெளிநாட்டு வங்கி மற்றும் முதலீட்டாளர்கள் மூலம் ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டமிட்ட 1 பில்லியன் டாலர் முதலீட்டை பெறும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள்
ரிலையன்ஸ் ஜியோ உடன் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் போராட்டத்தில் உள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் உள்ள 5-6 வங்கிகள் நிதியை திரட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடியா-வோடபோன்
மறுபுறம் ஜியோவிற்கு எதிராக ஐடியா-வோடபோன் இணைப்புகள் பணிகள் பிரதமர் அலுவலகத்தின் வாயிலாக உந்தப்பட்டு விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்திய டெலிகாம் சந்தை
இதனால் அடுத்தச் சில மாதத்தில் நாட்டின் டெலிகாம் சந்தை தற்போது இருக்கும் நிலையை விடத் தரத்தின் அளவில் பெரிய அளவிலான மாற்றத்தை காணப்போகிறது.
அதேபோல் போட்டியும் பல மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிகிறது. ஆட்டத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெயலலிதா
ஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..!
வெறும் 1,212 ரூபாய்க்கு 12 லட்சம் டிக்கெட் விற்பனை.. இண்டிகோ-வின் பம்பர் ஆஃபர்..!

தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள்
தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியீடு.. ஆந்திரா முதலிடம்.. தமிழ் நாடு?