பிரான்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி இந்தியா 6 மிகப் பெரிய பொருளாதாரத்தினைப் படைத்த நாடாக முன்னேறியுள்ளது. உலக வங்கியின் புள்ளி விவரங்களின் படி இந்தியாவின் ஜிடிபி 2017-ம் ஆண்டு 2.59 டிரில்லியன் டாலர் ஆக உள்ளது. பிரான்ஸ் ஜிடிபி 2.58 டிரில்லியன் டாலராக உள்ளது.
அதே நேரம் இந்தியாவின் மக்கள் தொகை 1.34 பில்லியனாகவும், பிரான்ஸ் மக்கள் தொகை 67 மில்லியனாகவும் உள்ளது. எனவே பிரான்ஸ் மக்களின் தனிநபர் வருவாயானது இந்தியர்களை விடக் கிட்டத்தட்ட 20 மடங்களுக்கும் அதிகமாக உள்ளது.
பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி
பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி என்ற இரண்டு சீர்திருத்தங்களுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில காலாண்டுகளாக நிதானமாக உயர்ந்து வருகின்றது. அதே நேரம் வல்லுநர்கள் இந்தியாவின் பொருளாதாரம் வரும் ஆண்டுகளில் வேகமாக உயரும் என்றும் 2032-க்குள் உலகின் மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
உலக வங்கி
உலக வங்கியின் பொருளாதார அறிக்கையின் படி இந்தியாவின் பொருளாதாரம் 2018-ம் ஆண்டி 7.3 சதவீதமாகவும், அடுத்த இரண்டு வருடத்தில் 7.5 சதவீதமாகவும் உயரும் என்று குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
பொருளாதாரம்
இந்தியாவின் பொருளாதாரம் வலுவாகவும், நெகிழ்வாகவும், நீண்ட கால வளர்ச்சியினை அளிக்கக் கூடிய சாத்தியம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளதாக உலக வங்கியில் இயக்குநராக உள்ள அஹான் கோஸ் தெரிவித்துள்ளார்.
ஜிடிபி
ஜூன் மாத நிலவரத்தினைப் பார்க்கும் போது வலுவான தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டினை அதிகரித்தல் போன்றவை இந்தியாவின் ஜிடிபி-க்கு மிகப் பெரிய பங்கினை அளிக்கும்.
மீண்டும் வளர்ச்சி
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2017-ம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ந்து 5 காலாண்டுகள் குறைந்து இருந்து நிலையில் 2018-ம் ஆண்டும் மீண்டும் பழைய இடத்திற்கு வந்துள்ளது. இன்னும் ஜிஎஸ்டி சிக்கல்கள் தீர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications