இந்தியாவின் டாப் ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் கோடி கணக்கில் சம்பளம் வாங்குவது என்பது மட்டுமில்லாமல் கோடி மதிப்பிலான நிறுவனப் பங்குகளையும் ஊக்கத் தொகையாகப் பெறுகின்றனர்.
சில நேரம் இது போன்று நிறுவனங்களின் பங்குகள் பிற ஊழியர்களுக்கும் கிடைக்கும் நிலையில் இந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு என்று இங்குப் பார்க்கலாம்.
சி பி குர்நானி
டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சி பி குருநானி 2017-2018 நிதி ஆண்டில் 142.30 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மட்டும் இல்லாமல் சம்பளம் மற்றும் 3.98 கோடி ரூபாயினைப் போனஸாகவும் பெற்றுள்ளார்.
சென்ற நிதி ஆண்டில் மட்டும் குருநானிக்கு டெக் மகேந்திராவின் 30 லட்சம் பங்குகள் ஊக்க தொகையாக அளிக்கப்பட்டது. அதன் இன்றைய மதிப்பு 195 கோடி ரூபாய் ஆகும். டெக் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர்களில் 80.58 லட்சம் பங்குகள் என அதிகமாகப் பங்குகளை வைத்து இருப்பதும் இவர் தான். செவ்வாய்க்கிழமை வரையிலான கணக்கின் படி இவரிடம் உள்ள பங்குகளின் மதிப்பு 523 கோடி ரூபாய் ஆகும். ஐடி தலைமை நிர்வாக அதிகாரிகளில் அதிகப் பங்குகளை வைத்துள்ளவர் என்பதிலும் குருநானி முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.
அபிதாலி ஜி நீமுச்வாலா
விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அபிதாலி ஜி நீமுச்வாலா 2017-2018 நிதி ஆண்டில் 10.20 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்க தொகையாகப் பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் சம்பளம் மற்றும் 8.03 கோடி ரூபாய் போனஸூம் பெற்றுள்ளார்.
சலில் பரேக்
2018 ஜனவரி 2 முதல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ள சலில் பரேக் 2017-2018 நிதி ஆண்டில் 3.98 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார். மேலும் 2018-ம் ஆண்டுப் பிப்ரவரி மாதம் இவருக்கு அளிக்கப்பட்ட பங்குகளின் இன்றைய மதிப்பு 14.70 கோடி ரூபாய் ஆகும்.
ராஜேஷ் கோபிநாதன்
டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜேஷ் கோபிநாதன் 2017-2018 நிதி ஆண்டில் 12.49 கோடி ரூபாயினைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.
எச்சிஎல்
இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜிஸ் 2017-2018 நிதி ஆண்டுக்கான அறிக்கையினை வெளியிடாததால் விவரங்களைத் தெரியவில்லை.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications