2014-ம் ஆண்டுப் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற பிறகு உலகின் 6-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இந்தியா முன்னேற 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஜிடிபி 7 சதவீதத்திற்கும் அதிகமாகவே இருந்தால் 2018-ம் ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தினை பின்னுக்குத் தள்ளி 5 இடத்தினை இந்தியா பிடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
10 வது இடம்
2014-ம் ஆண்டுப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த போது உலகப் பொருளாதாரப் பட்டியலில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், இத்தாலி மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 10வது இடத்தில் இருந்தது.
2017
2017-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் பொருளாதாரம் 2.597 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில் அது இங்கிலாந்தினை விட 25 பில்லியன் டாலர் மட்டுமே குறைவாகும்.
சீனா - இந்தியா
சீனாவின் பொருளாதாரம் 6.6 சதவீதமாக உள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரம் 2018 இறுதியில் 7.4 சதவீதமாகவும், 2019-ல் 7.8 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
2028 கணிப்பு
2028-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது ஜெர்மனி, ஜப்பானை விட அதிகமாக இருக்கும் என்றும் உலகின் 3-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக உருவெடுக்கும் என்றும் போஃபா மெரில் லிஞ்ச் சர்சதேச ஆய்வானது குறிப்பிட்டுள்ளது.
மார்கன் ஸ்டான்லி
இந்தியாவின் பொருளாதாரம் அடுத்த 10 வருடத்தில் 6 டிரில்லியன் டாலராக அதிகரித்து மூன்றாம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக இருக்கும் என்று மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது.
தனிநபர் வருவாய்
இந்தியா 6-ம் மிகப் பெரிய பொருளாதாரம் படைத்த நாடாக வளர்ந்துள்ள நிலையில் தனிநபர் வருவாய் 2,130 டாலர் ஆக உள்ளது. அதே நேரம் இந்தியாவினை குறைவாகப் பொருளாதாரம் உள்ள பிரான்ஸ் தனிநபர் வருவாய் 44,930 டாலராகவும், பிரேசில் தனிநபர் வருவாய் 10,220 டாலர், இத்தாலி 35,910 டாலர், ரஷ்யா 11,950 டாலராக உள்ளது. 2016-ம் ஆண்டின் தனிநபர் வருவாய் பட்டியலில் இந்தியா 126 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் உள்ள மக்கள் மிகப் பெரிய அளவிலான மக்கள் தொகை அவர்களது இலக்குகளை அடைய எளிமையாக இருந்தாலும் வருவாய் சமநிலையில் மிகவும் பின்தங்கியுள்ளது.
கோடீஸ்வரர்கள்
இந்தியாவில் உள்ள 1 சதவீத கோடீஸ்வரர்களிடம் தான் மொத்த நாட்டின் 73 சதவீத செல்வமும் உள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் சர்வே தெரிவித்துள்ளது.
மக்கள் தொகை
இந்தியாவின் மக்கள் தொகையைத் தற்போது உள்ள நிலவரத்தினை வைத்து பார்க்கும் 2024-ம் ஆண்டுக்குள் சீனாவினை விட அதிகரித்து மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்ற இடத்தினை எட்டும் என்றும் தரவுகள் கூறுகின்றன. எனவே அரசுகள் அதற்கு ஏற்ற சட்டங்களை வகுத்து நிலைமையைக் கட்டுக்குக்கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications