இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான ஒலா, அமெரிக்கா உபர் உடன் போட்டி போட்டு வந்தாலும், தொடர்ந்து இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் போட்டியின் காரணமாகத் தொடர்ந்து தள்ளுபடி, சலுகை எனத் தொடர்ந்து அறிவித்த காரணத்தால் நஷ்டத்தை மட்டுமே பெற்ற ஓலா தற்போது லாபத்தைப் பெற துவங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஓலா நிறுவனத்தின் ஒவ்வொரு பயணத்திலும் லாபத்தைப் பெற துவங்கியுள்ளது. இது ஆன்லைன் டாக்ஸி சேவையில் ஒரு மையில்கல் என ஒலா தெரிவித்துள்ளது.

ஆனால் இது போதாது, ஒலா நிறுவனம் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய சம்பளம் மற்றும் தொழில்நுட்பத்திற்குச் செய்யும் செலவை திருப்பி எடுக்கும் அளவிற்கு லாபத்தை அடையும் போதுதான் நிறுவனம் முழுமையான லாபத்தை அடையும் நிறுவனமாக மாறும்.
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முடிவிற்குள் ஒலா முழுமையான லாபத்தை அடையும் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ENTR - effective net take rate அளவீடு லாபகரமாக மாறியுள்ளது. இதனை அடிப்படையிலேயே ஒலா லாபகரமாக மாறியுள்ளது என ஓலா நிறுவன தலைமை நிர்வாக இயக்குனர் பிவிஷ் அகர்வால் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications