நாட்டின் முன்னணி வர்த்தகக் குழுமம் விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மும்பை பங்குச்சந்தையில் கிட்டத்தட்ட 10 வருடத்திற்குப் பின் 100 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.
இன்று காலை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் அடைய வெறும் 2 பில்லியன் டாலர் மீதமிருந்த நிலையில், 12.00 மணி அளவில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 100 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ளது.
டிசிஎஸ்
3 மாதத்திற்கு முன்பு இந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டாடா குழுமத்தின் டிசிஎஸ் நிறுவனம் 100பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டைத் தொட்ட நிலையில், தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் 100 பில்லியன் டாலரை தொட்டுள்ளது.
10 வருட இடைவேளை
2008, ஜனவரி 18ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 39.5 ரூபாயாக இருக்கும் போது 100 பில்லியன் டாலரை அடைந்தது.
தற்போது 69 ரூபாயாக இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் 10 வருட இடைவேளையில் 100 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது.
சொத்து மதிப்பு
இதன் மூலம் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 42 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இவர் ரிலையன்ஸ் குழுமத்தில் சுமார் 47 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
ஜியோ
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஜியோ அறிமுகத்திற்குப் பின் தொடர் வளர்ச்சியில் இருக்கிறது. செப்டம்பர் 5, 2016இல் மக்களுக்கான சேவையை ஜியோ அறிமுகம் செய்த பின்பு முதல் இன்று வரையிலான காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சந்தை மதிப்பு 49.3 பில்லியன் டாலர் வரையில் அதிகரித்துள்ளது.
முதலீடு
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தில் மட்டும் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்துள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications