சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் மற்றும் டாடா சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் விமானப் போக்குவரத்து சேவை அளிக்கும் விஸ்தாரா நிறுவனம் தனது சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு அமெரிக்காவில் போயிங் நிறுவனத்திலும், ஐரோப்பாவின் ஏர்பஸ் ஆகிய இரு விமானத் தயாரிப்பு நிறுவனங்களிடமும் புது விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.
விஸ்தாரா
இந்த வருடம் உள்நாட்டில் விமானச் சேவையையும், நீண்ட பயணத்தை மேற்கொள்ளும் சர்வதேச விமானச் சேவையையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதற்காகப் புதிய விமானங்களை விஸ்தாரா நிறுவனம், ஏர்பஸ், போயிங் நிறுவனங்களிடம் ஆர்டர் செய்துள்ளது.
விமானங்கள்
இந்நிலையில் விஸ்தாரா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்தில் 13 ஏ320நியோ மற்றும் 7 ஏ321நியோ விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இதேபோல் போயிங் நிறுவனத்தில் 6 போயிங் 787-9 அல்லது டிரீம்லைனர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.
குத்தகை
மேலும் விஸ்தாரா நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் 37 விமானங்களைக் குத்தகை எடுத்துள்ளது, இதன் மூலம் ஏர்பஸ் விமானங்களின் எண்ணிக்கை 50 விமானங்களாக உள்ளது.
இதேபோல் போயிங் நிறுவனத்தில் 4 போயிங் 787 விமானங்களைக் குத்தகைக்கு எடுத்துள்ளது.
இண்டிகோ
2015இல் இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து சுமார் 250 ஏர்320நியோ விமானங்களை 26.5 பில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இது சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்டர்.
ஆதிக்கம்
விஸ்தாரா நிறுவனம் தற்போது 22 இடங்களுக்கு வாரம் சுமார் 800 முறை சேவையை அளித்து வருகிறது. இதன் மூலம் மொத்த வர்த்தகத்தில் 4 சதவீத சந்தையை விஸ்தாரா வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications