ஐடிபிஐ வங்கியில் எல்ஐசி அதிகளவில் முதலீடு செய்ய உள்ளது என்று செய்திகள் வெளியான உடன், கடனில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களை மீட்க எல்ஐசி பாலிசிதாரர்களின் பணத்தினைப் பயன்படுத்துவதா என்று மிகப் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஐடிபிஐ வங்கியில் 5,372 கோடி ரூபாய் வரை கடன் வாங்கிவிட்டுச் செலுத்தாத 120 நபர்கள் குறித்த இவ்வரங்கள் வெளியாகியுள்ளது.
ஐடிபிஐ வங்கியில் 2018 மே 16-ம் தேதி வரையிலான கணக்கின் படி 120 நபர்கள் 5,372 ரூபாய் வரை கடனை பெற்று அதனை வேண்டும் என்றே திருப்பி அடைக்காமல் உள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
மொத்த தொகையான 5,372 கோடி ரூபாயில் 70 சதவீதம் என 3,717 கோடி ரூபாயினை 10 நபர்கள் மட்டும் திருப்பி அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 2017 டிசம்பர் மாதம் இந்த வரா கடன் அளவானது 4,154 கோடி ரூபாயாக இருந்தது.
எஸ் குமார்ஸ் நேஷன்வைட்
மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜவுளி மற்றும் ஆடை நிறுவனமான எஸ் குமார்ஸ் நேஷன்வைட் நிறுவனமானது அதிகபட்சமாக 834 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஐடிபிஐ வங்கி தெரிவித்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
கடன் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்தில் தஞ்சம்புகுந்தல்ல விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 696 கோடி ரூபாயினைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ருச்சி சோயா
கடனில் சிக்கியது மட்டும் இல்லாமல் திவால் ஆகியுள்ள ருக்கி சோயா நிறுவனம் 465 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டுமாம். இந்த நிறுவனத்தினை வாங்க பாபா ராம்தேவின் பதஞ்சலியும், அதானி போர்ட்ஸ் நிறுவனமும் போட்டி போட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குப்தா கோல் இந்தியா
நாக்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் குப்தா கோல் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் 451.25 கோடி ரூபாயினைத் திருப்பிச் செலுத்த வேண்டுமாம்.
டெக்கன் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ்
ஹைதராபாத்தினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆங்கிலத் தினசரி செய்தி நிறுவனமான டெக்கன் கிரானிக்கல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் 269.33 கோடி ரூபாயினைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
ரெய்ட் & டெய்லர் இந்தியா
ஸ்காட்டிஸ் நிறுவனமான ரெய்ட் & டெய்லரின் இந்திய பிரிவு 260.24 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனை உரிமையினையும் எஸ் குமார்ஸ் நேஷன் வைட் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி
சென்னையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஃபர்ஸ்ட் லீசிங் கம்பெனி நிறுவனம் 250.86 கோடி ரூபாய் கடனை ஐடிபிஐ வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
சூரன்னா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட்
பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சூரன்னா இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டட் நிறுவனம் 190.68 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க வேண்டும்.
ஜெயின் இன்ஃப்ராபிராஜக்ட்ஸ்
ஜெயின் இன்ஃப்ராபிராஜக்ட்ஸ் நிறுவனம் 159.78 கோடி ரூபாய் கடனை திருப்பி அளிக்க வேண்டுமாம்.
ஆர்பிஐ விதி
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிப்படி வாங்கிய கடனை திருப்பி அளிப்பது குறித்துப் பல்வேறு முரை பேச்சுவார்த்தை நடத்தியும், கடனை திருப்பிச் செலுத்த கூடிய திறன் இருந்தும் கடனை திருப்பிச் செலுத்தாவர்களை வேண்டுமென்றே கடனை செலுத்தாத விஃபுல் டீஃபால்ட்டர்ஸ் எனப்படும் நாணயமற்றவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை பட்டியலில் இவர்களைப் பெயரை இணைத்துள்ளனர்.
வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ள கடன் தொகை
நாடு முழுவதும் இது போன்று 1.26 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டுக் கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளார்கள் என அன்மையில் சிபில் தரவுகள் கூறுகின்றன.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கி தங்களது நிறுவனத்தில் 15,354 கோடி ரூபாய் நாணயமற்றவர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை பட்டியலில் உள்ளதாக ஜூன் 30-ம் தேதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications