சர்வதேச அளவில் 130 மில்லியன் பெண் குழந்தைகள் கல்வி அறிவைப் பெற முடியாத சூழலில் உள்ளதாகவும் அதனால் உலக நாடுகளுக்கு 30 டிரில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படும் என்றும் உலக வங்கி புதன் கிழமை தெரிவித்துள்ளது.
இரண்டாம் நிலை கல்வி அறிவைப் பெற்ற பெண்கள் வேலை செய்யும் போது படிக்காத பெண்களை விட இரண்டு மடங்கு கூடுதல் வருவாயினைப் பெறுவதாகவும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
பள்ளிக்கு செல்ல முடியாத பெண் குழந்தைகள்
உலகம் முழுவதிலும் 132 மில்லியன் பெண் குழந்தைகள் 6 முதல் 17 வயது வரையில் பள்ளிக்கு செல்வதில்லை. குறைந்த தனிநபர் வருவாய் உள்ள பல நாடுகளில் மூன்றில் இரு பெண் குழந்தைகள் ஆரம்பப் பள்ளிப்படிப்பை மட்டுமே பெறுகின்றன என்று உலக வங்கி கூறியுள்ளது.
வருவாய்
உலகம் முழுவதிலும் உள்ள எல்லா நாடுகளின் அனைத்துப் பெண் குழந்தைகளும் தரமான கல்வியை 12 ஆண்டுகளுக்குப் பெற்றால் அவர்களின் வருவாய் 15 முதல் 30 டிரில்லியன் வரை இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக வங்கி
மேல் நிலை பள்ளிப்படிப்பினை பெண் குழந்தைகள் படித்து முடித்து இருந்தால் பெண் குழந்தை திருமணம், சிறு வயதில் பெண்கள் கருத்தரித்தல், ஊட்டச்சத்தின்மை போன்றவை குறையும் என்றும் உலக வங்கி கூறுகிறது.
கல்வி
பெண் குழந்தைகள் அடிப்படை கல்வியை மட்டும் பெற்றால் போதும் என்பதை மாற்றி மேல் நிலை கல்வி வரை படிக்க வேண்டும் என்ற சட்டத்தினை எல்லா நாடுகளிலும் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று தாம்சன் ரியூட்டர்ஸ் அமைப்பு கூறியுள்ளது.
மலாலா
2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினை பெற்ற மலாலா பெண் குழந்தைகளுக்குச் சரியான கல்வி கிடைக்காததால் உலகம் முழுவதிலும் இருந்து 130 மில்லியன் பெண் பொறியாளர்கள் அல்லது தலைமை நிர்வாக அதிகாரிகள் போன்றவர்களை நாம் இழந்து வருகிறோம் என்று தெரிவித்து இருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் வியாழக்கிழமை மலாலா தினத்தினைக் கொண்டாடுவதை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications