இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸின் 2018-2019 நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 3.70 சதவீதம் உயர்ந்து ஜூன் 2018 முடிந்த காலாண்டில் 3,612 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் அளிப்பதாகத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்போசிஸ் ஜூன் காலாண்டில் 3,731.80 கோடி ரூபாய் லாபத்தினைப் பெற்று இருக்கும் என்று வல்லுநர்கள் கணித்த நிலையில் அதனை விடக் குறைவாகவே லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
இன்போசிஸ் நிறுவனம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் செயல்பாடுகளில் இருந்து 19,128 கோடி ரூபாய், பிற வருவாயாக 726 கோடி ரூபாய் என மொத்தமாக 19,854 கோடி ரூபாயினை வருவாயாக ஈட்டியுள்ளது.
இதே காலாண்டில் சென்ற ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 17,892 கோடி ரூபாய் வருவாய் எனப் பதிவு செய்து இருந்தது. 2018 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 18,735 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி இருந்தது. 2017-2018 நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 73,833 கோடி ரூபாய் ஆகும்.
செலவுகள்
இன்போசிஸ் நிறுவனம் வருவாய் 19,854 கோடி ரூபாய் என்ற நிலையில் 14,651 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளது. இதுவே மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் 13,729 கோடி ரூபாயினைச் செலவு செய்து இருந்தது. சென்ற ஆண்டு இதே காலாண்டில் 12,967 கோஇ ரூபாயினைச் செலவு இது இருந்தது. வருவாய்க்கு ஏற்றவாறு செலவும் அதிகரித்துள்ளது.
நிகர லாபம்
வரி செலுத்துவதற்கு முன்பு இன்போசிஸ்-ன் ஜூன் காலாண்டு நிகர லாபமானது 4,993 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே சென்ற காலாண்டில் 5,006 கோடி ரூபாயாகவும், சென்ற ஆண்டு இதே காலாண்டில் 4.854 கோடி ரூபாயாகவும் பதிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017-2018 நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனம் மொத்தமாக 20,270 கோடி ரூபாயினை நிகர லாபமாகப் பெற்றுள்ளது.
பங்குகளின் வருவாய்
இன்போசிஸ் நிறுவனத்தின் 5 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்கின் வருவாய் 16.60 ரூபாய் ஆக உள்ளது. இதுவே சென்ற காலாண்டில் 16.97 ரூபாயாகவும், சென்ற ஆண்டு இதே காலாண்டில் 15.23 ரூபாயாகவும் இருந்தது. 2017-2018 நிதி ஆண்டில் 5 ரூபாய் மதிப்பிலான ஒரு பங்குக்கு 71 ரூபாய் வரை லாபம் கிடைத்துள்ளது.
போனஸ்
2018 ஜூலை 13-ம் தேதி இன்போசிஸ் போர்டு உறுப்பினர்கள் இடையிலான கூட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் அளிப்பதாக முடிவு எடுத்துள்ளனர். எனவே அனைத்து முதலீட்டாளர்களின் பங்குகளும் இரட்டிப்பாக உள்ளது.
டிவிடண்ட்
மார்ச் மாத காலாண்டு முடிவில் டிவிடண்ட் அளிக்கப்பட்டு இருந்த நிலையில் 2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் டிவிடண்ட் அளிக்கப்படவில்லை என்றால் போனஸ் பங்குகள் அளிக்கப்பட்டுள்ளது.
வருவாய் அளித்த வணிகங்கள்
நிதி சேவைகள், ரீடெயில், கம்யூனிகேஷன், எனர்ஜி, உற்பத்தி, லைப் சையின்ஸ் என அனைத்துத் துறை சார்ந்த வணிகங்களிலும் சென்ற காலாண்டும் ஒப்பிடும் போது கூடுதல் லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இன்போசிஸ் நிறுவனத்தில் மொத்தமாக 2,09,905 ஊழியர்கள் உள்ள நிலையில் ஜூன் காலாண்டில் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் சராசரியாக 54,900 டாலரினை வருவாயாகப் பெற்றுள்ளது. இதுவே சென்ற ஆண்டு 2,04,107 ஊழியர்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.
ஊழியர்கள் வெளியேற்றம்
எந்த ஓரு ஐடி நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் வெளியேறி வரும் நிலையில் ஊழியர்களிலும் 23 சதவீதம் வரை வெளியேறியுள்ளனர். இதுவே என்ற நிதி ஆண்டில் 19.5 சதவீதமும், சென்ற ஆண்டு இதே காலாண்டில் 21 சதவீதமாகவும் ஊழியர்கள் வெளியேற்றம் இருந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications