ரிலையன்ஸ் நிறுவனம் இந்திய இ-காமர்ஸ் சந்தையில் கால் பதிக்க இருக்கும் நிலையில் ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உள்ள ஜாக் மாவை முகேஷ் அம்பானிக்கு பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்தினைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வெள்ளிக்கிழமை சந்தை மதிப்புடன் சேர்த்து அம்பானியின் செல்வ மதிப்பானது 44.3 பில்லியன் டாலராக உள்ளது.
முகேஷ் அம்பானி
நடப்பு நிதி ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானி தனது பெட்ரோகெமிக்கல் வணிகம், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற வணிகங்களில் முதலீட்டினை அதிகரித்ததன் மூலமாக 4 பில்லியன் டாலரினை கூடுதலாகத் தனது செல்வ மதிப்பில் சேர்த்துள்ளார்.
வணிகங்கள்
அம்பானி வசம் உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மையம், மிகப் பெரிய அளவில் இணையதளச் சேவைப் பயன்படுத்தும் ஜியோ நெட்வொர்க் மற்றும் மிகப் பெரிய ரீட்யில் பிரிவு போன்றவை உள்ளது.
ஆண்டுப் பொதுக் கூட்டம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் ஜியோவின் வாடிக்கையாளர் எண்ணிக்கையினை 215 மில்லியனாக அதிகரிப்பது, ஆன்லைன் டூ ஆப்லைன் இ-காமர்ஸ் வர்த்தகத்தினைத் துவங்குவது போன்ற திட்டங்களின் மூலம் அமேசான், வால்மார்ட், அலிபாபா போன்ற நிறுவனங்களைப் பீதியடைய வைத்துள்ளார்.
ஜியோ ஜிகா பைபர்
மேலும் இந்தியாவின் 1,100 இந்திய நகரங்களில் ஆகஸ்ட் மாதம் முதல் ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவை மற்றும் ஸ்மார்ட் ஹோம் சேவை, தொலைக்காட்சி சேவை போன்றவையும் அளிக்க உள்ளார்.
100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெற்ற சில நாட்களில் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் படைத்த நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்துள்ளது.
சொத்து
ரிலையன்ஸ் நிறுவத்தின் தலைவராக இருந்த திருபாய் அமபானி 2002-ம் ஆண்டு இறந்த பிறகு அந்தப் பொறுப்பினை முகேஷ் அம்பானி ஏற்று வழிநடத்தி வந்த நிலையில் 2005-ம் ஆண்டுப் பல சர்ச்சைகளுக்கு இடையில் அனில் அம்பானியுடன் சொத்தை இரண்டாகப் பகிர்ந்துகொண்டார்.
ஃபோர்ப்ஸ்
ஃபோர்ப்ஸ் பட்டியல் படி ஜாக் மாவின் செல்வ மதிப்பு 40.6 பில்லியன் டாலார உள்ள நிலையில், முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 45.3 பில்லியன் டாலராக உள்ள நிலையில் ஆசியன் மிகப் பெரிய கோடீஸ்வரர் தான் என்பதை அம்பானி உறுதி செய்துள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications