குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை அளித்து வரும் ஸ்பைஸ்ஜெட் இரண்டு அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து வெளிநாட்டு விமானச் சேவையுடன் பிற வணிகங்களிலும் கவனம் செலுத்து உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
விமானப் போக்குவரத்து + தொழில்நுட்பம்
ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமானது அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனத்துடன் இணையப் பேச்சுவார்த்தை நடக்கும் அதே நேரம் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றுடன் இணைய முடிவு செய்துள்ளது.
பிற வணிகங்கள்
ஸ்பைஸ்ஜெட் தற்போது விமானப் போக்குவரத்து சேவை என்பது மட்டும் இல்லாமல் விமானப் போக்குவரத்துடன் தொடர்புடைய பிற வணிகங்களிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான நேரத்தில் எங்களது அறிவிப்புகள் வரும் என்றும் ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்தில் தங்களது பங்களிப்பினை அளிக்க முடிவு செய்துள்ளது. நாங்கள் கார்கோ, கொரியர் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வணிகத்திலும் இருக்க விரும்புகிறோம். ஸ்பைஸ்ஜெட் வணிகத்திற்கு இது முக்கிய மையில் கல்லாக இருக்கும் என்றும் அஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இணைவின் பயன்
அமெரிக்க நிறுவனத்துடன் இணைவதனால் ஸ்பைஸ்ஜெட்டின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் அனுபவமும் அதிகரிக்கும் என்றும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களாக இது இருக்கும் என்றும் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications