பெங்களூரு: இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக வளர்ந்துள்ள எஹ்ச்சிஎல் நிறுவனம் வியாழக்கிழமை ஒரு பங்கு 1,100 ரூபாய் என 4000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திருப்பி வாங்க முடிவு செய்துள்ளது.
எஹ்ச்சிஎல் நிறுவனத்தின் 60 சதவீத பங்குகள் அதன் பிரம்மோட்டர்களிடமும், 27 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும் உள்ளது.
லாபம்
இப்படி வெளியில் இருக்கும் பங்குகளைத் திருப்பி வாங்கிக் குறைப்பதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தினை அதிகரிக்க முடியும் என்று எஹ்ச்சிஎல் முடிவு செய்துள்ளது.
பங்கு நிலவரம்
வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் எஹ்ச்சிஎல் நிறுவனப் பங்குகள் 20.45 புள்ளிகள் என 2.03 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை 984.85 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு இருந்தது.
டிசிஎஸ்
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் அன்மையில் தான் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தது.
பிரீமியம்
தற்போது உள்ள எஹ்ச்சிஎல் நிறுவனப் பங்குகளின் மதிப்பினை விட 9.4 சதவீதம் வரை கூடுதலான விலை கொடுத்து 3,63,63,636 பங்குகளை வாங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications