வாயும், வயிறும் இருக்கும்வரை கடன் வாங்காமல் யாரும் இருக்க முடியாது. சாதாரணமாக லஷ்மி பேங்கில் நாம் கடன் வாங்கினால், லஷ்மி மிட்டல் ஹெச்.டி.எப்.சி யில் கடன் வைத்திருப்பார்.
விவசாயிகள் எப்படி அரசு மூலம் பயிர்க்கட்ன் வாங்குகிறார்களோ, அதேபோலத் தான் பணியாளர்கள் அலுவலகத்தில் கடன் பெறுகிறார்கள். அதில் ஊழியர்களுக்கு வட்டியுடன் கடன் வழங்குகிறார்களா, வட்டியில்லா கடன் அளிக்கிறார்களா என்பதுதான் வித்தியாசம்.
வட்டியில்லா கடன்
ஊழியர்கள் வட்டியில்லா கடன் பெறுவது ஒன்றும் அரிதிலும் அரிய விஷயம் என்று எண்ணிவிடக்கூடாது. உலகில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வட்டியில்லாமலும், சலுகைகளுடனும் கடனை வழங்கி வருகிறது என்பதுதான் நிதர்சனம். அதேநேரம் இதுபோன்ற கடன்வகைகளுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. இது தொடர்பான வழக்கு ஒன்றில் வருமான வரித் தீர்ப்பாயம், ஊழியர்களின் பங்களிப்பில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடனை ஒரு வரிவிலக்காகக் கருத வேண்டும் என்கிறது. இதனைத் தற்காலிகமான முறையில் மதிப்பீடு செய்ய முடியாது என்றும், வருமான வரித்துறை சட்டத்தின்படிதான் வரையறுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
வழக்கு
சமீபத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டது. தீஜ் இமபக்ஸ் என்ற நிறுவனத்திடம் அதன் ஊழியர் நேகா சரப் என்ற ஊழியர் வட்டியில்லா கடன் வாங்கியிருந்ததாகவும், இதற்கு 2010- 11 ஆம் நிதியாண்டில் 15 விழுக்காடு வட்டியை வருமானவரித்துறை விதித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவருடைய வருமானம் 43 புள்ளி 8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.இந்த வழக்கில் முதலாளி, தொழிலாளி என்ற உறவுமுறை இல்லை என வாதிடப்பட்டது. ஆனால் சம்பளத்தில் இருந்து 24 லட்சம் ரூபாயை அந்த நிறுவனம் டி.டி.எஸ்.ஆகக் கழிக்க உத்தரவிடப்பட்டது.
இதன் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறை அதிகாரிகளால் கடன் மதிப்புச் சரியாக நிர்ணயம் செய்யப்பட்டதாகத் தீர்ப்பாயம் கூறியது. குறிப்பிட்ட அந்த ஊழியரை அந்த நிறுவனம் ஏற்கனவே கைவிட்டதாகக் கூறிவிட்டதால், இதனால் அவருடைய பணமாக அதனை ஏற்க முடியாது என்று நிராகரித்தது. தற்காலிகமாக மதிப்பீடு செய்யும்போது வருமானவரித்துறை தனது சட்டத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பதை ஏற்க முடியாது என்றது. கடனை சரியாக மதிப்பீடு செய்தபோது அது 20 லட்சத்து 65 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. அப்போ வட்டியில்லா கடனுக்கும் வட்டி விதிக்கப்படுமா என்று கேட்கிறீர்களா. அப்டியே இங்க வாங்க...
இலவச கடன்களைப் பெறுவது எப்படி....
இலவச கடன்களை வாங்குவதற்கு முன்பு முக்கியமான சில காரணிகளை நீங்கள் கவனித்தாக வேண்டும். 1961 வருமானவரித்துறை சட்டத்தின் கீழ் அலுவலகங்களில் பெறக்கூடிய வரிவிதிக்கத்தக்க இலவச கடன்கள் குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
1. ஒவ்வொரு மாத்தின் கடைசி நாளிலும் அதிகபட்ச நிலுவைத் தொகையைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்
2.ஒவ்வொரு நிதி ஆண்டும் முடிந்த பிறகு, ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிர்ணயிக்கக்கூடிய கடனுக்கான வட்டியை, கவனத்தில் கொள்ள வேண்டும்
3. ஒவ்வொரு மாதமும் நிலுவையில் உள்ள தொகையையும் சேர்த்து, பேங்க் ஆப் இந்தியா வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்தில் வட்டி கணக்கிடப்படுகிறதா என்பதை அறிய வேண்டும்
4.நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்திலிருந்து சராசரியை கழிக்கும்போது இறுதியான தொகை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும்
5.நிலுவையில் உள்ள தொகையானது வரிக்கு வரி விதிக்கப்பட்ட தொகைகு நிகராக உள்ளதா என்பதை அறிய வேண்டும்
நிபந்தனைகள்
இதில் உள்ள இரண்டு நிபந்தனைகள் சிலவகைக் கடன்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
• ஒரு சில குறிப்பிட்ட நோய்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது, அவர்கள் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றால் பணம் திருப்பிச் செலுத்தப்படுவதில்லை. இதனால் இதற்குப் பொருந்தாது.
•ஊழியருக்கு வழங்கப்படும் மொத்த தொகை 20 ஆயிரமோ அல்லது அதற்குக் குறைவாகவோ இருந்தால் இது பொருந்தக்கூடியதல்ல
இதுபோன்ற கடன்களைப் பெறும் ஊழியர்கள், மொத்தக் கடனுக்கான வருமானத்தில் டி.டி.எஸ் கழிக்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இதற்கு டி.டி.எஸ் கழிக்கத் தவறி விட்டதால் கடன் பெற்ற ஊழியர் வருமானவரி செலுத்த நேரிடுவதோடு, வட்டி செலுத்துவதும் கட்டாயமாகிவிடும்
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications