ஏர்ஏசியா இந்தியா ஞாயிற்றுக்கிழமை விமான பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 30 சதவீத சலுகையினை அறிவித்துள்ளது. ஏர்ஏசியாவின் அதிகாரப்பூர்வ இணையதளமான airasia.com மற்றும் ஏர்ஏசியா மொபைல் செயலி கீழ் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் கிடைக்கும்.
சலுகை காலம்
ஏர்ஏசியாவின் 30 சதவீத சலுகை விலையில் 2018 ஜூலை 17 முதல் நவம்பர் 30 வரை பயணம் செய்யக் கூடிய விமான டிக்கெட்களை 2018 ஜூலை 22 வரை புக் செய்யலாம்.
வழித்தடங்கள்
30 சதவீத சலுகை விலை டிக்கெட்கள் ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, குவஹாத்தி, இம்பால், பாக்தோகிரா, ராஞ்சி, இந்தூர், நாக்பூர், புபனேஷ்வர், சூரத் மற்றும் பிற வழித்தடங்களிலும் கிடைக்கும்.
999 ரூபாய் சலுகை
ஏர்ஏசியா ஏற்கனவே குறிப்பிட்ட சில வழித்தடங்களில் 999 ரூபாய்க்குச் சலுகை விலை டிக்கெட்கலை அறிவித்து இருந்தது. சென்னை - பெங்களூரு, பெங்களூரு-கொச்சி, கவுகாத்தி - இம்பால் ஆகிய வழித்தடங்களில் ஏர்ஏசியா இந்தியா 999 ரூபாய்க்குச் சலுகை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.
பிற சலுகைகள்
புவனேஷ்வர் - ராஞ்சி 1,199 ரூபாய், ராஞ்சி - கொல்கத்தா 1,199 ரூபாய், ராஞ்சி - டெல்லி 1,999 ரூபாய், கொச்சி - ஹைதராபாத் 1,699 ரூபாய், கொல்கத்தா - பகோத்ரா 1,499 ரூபாய், கோவா - இந்தூர் 1,299 ரூபாய், கவுகாத்தி - கொல்கத்தா 1,999 ரூபாய், பெங்களூரு - ஹைதராபாத் 1,099 ரூபாய் என ஏர்ஏசியா இந்திய பிற வழித்தடங்களில் சலுகைகளை விலை விமானப் பயணங்களை அளிக்கிறது.
சலுகை காலம்
999 ரூபாய் சலுகை விலை டிக்கெட்களை 2018 ஜூலை 15-ம் தேதிக்குள் புக் செய்து 2019 பிப்ரவரி முதல் 2019 ஆகஸ்ட் 13 வரை பயணம் செய்யலாம்.
டிக்கெட் விதிகள்
ஏர்ஏசியா சலுகை விலை டிக்கெட்களை டெபிட், கிரெடிட் அல்லது பிற கார்டுகள் மூலம் புக் செய்த பிறகு இரத்து செய்தால் செயலாக்க கட்டணங்கள் திருப்பு வழங்கப்பட மாட்டாது. டிக்கெட் கட்டணத்தில் விமான நிலைய வரியும் உள்ளடங்கும். குறைந்த டிக்கெட்கள் மட்டுமே சலுகை விலையில் வழங்கப்படுகிறது என்பதால் முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications