இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்புத் திங்கட்கிழமை ஒரு வருட உயர்வாக 6 சதவீதம் அளவினை தொட்டது. ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் எதிர்பார்த்ததை விடக் குறைந்த அளவிலான வருவாயினையே இன்போசிஸ் பெற்று இருந்தது.
இன்போசிஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை சந்த துவங்கிய போது 5.75 சதவீதம் உயர்ந்து 1,384.40 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தையில் 5 சதவீதம் உயர்ந்து 1,384.40 ரூபாய் என வர்த்தகம் செய்யப்பட்டது. இன்று காலை முதல் அதிக லாபம் அளித்த பங்காக இன்போசிஸ் உள்ளது.
லாபம்
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸின் 2018-2019 நிதி ஆண்டின் முதலாம் காலாண்டு அறிக்கை வெள்ளிக்கிழமை வெளியானது. இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் 3.70 சதவீதம் உயர்ந்து ஜூன் 2018 முடிந்த காலாண்டில் 3,612 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு 1:1 போனஸ் அளிப்பதாகத் தெரிவித்தால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வருவாய்
இன்போசிஸ் நிறுவனம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் செயல்பாடுகளில் இருந்து 19,128 கோடி ரூபாய், பிற வருவாயாக 726 கோடி ரூபாய் என மொத்தமாக 19,854 கோடி ரூபாயினை வருவாயாக ஈட்டியுள்ளது.
சென்ற ஆண்டு வருவாய்
இதே காலாண்டில் சென்ற ஆண்டு இன்போசிஸ் நிறுவனம் 17,892 கோடி ரூபாய் வருவாய் எனப் பதிவு செய்து இருந்தது. 2018 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனம் 18,735 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டி இருந்தது. 2017-2018 நிதி ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் 73,833 கோடி ரூபாய் ஆகும்.
இன்போசிஸ்-டிசிஎஸ்
இன்போசிஸ்-ஐ விட மிகப் பெரிய மற்றும் போட்டி நிறுவனமான டிசிஎஸ் முதல் காலாண்டில் நல்ல லாபத்தினைப் பதிவு செய்துள்ள நிலையில் இன்போசிஸ் அதன் முன் சரிந்து காணப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தினை விடக் கூடுதலாக 44 சதவீத வணிகத்தினை டிசிஎஸ் செய்து வரும் நிலையில் 4.1 சதவீத வளர்ச்சியினைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிற்பகல் நிலவரம்
காலை மிகப் பெரிய உச்சத்தினைத் தொட்ட இன்போசிஸ் நிறுவன பங்குகள் பிறபகல் 2:48 மணி நிலவரத்தின் படி 26.70 புள்ளிகள் என 2.04 சதவீதம் உயர்ந்து 1,335 ரூபாயாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications